292-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்திப்பதே புதுவித அனுபவம்தான். 'யார் இவர்?’ என்கிறீர்களா? கூடல் மாநகரின் ஹிஸ் ஹைனஸ் மதுரை ஆதீனம்!

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் ஆதீன மடம் கிரானைட் கற்களால் ஜொலிக்கிறது. ஆங்காங்கே சி.சி. டி.வி. கேமராக்கள் கண்காணிக்கின்றன. வயதான ஓர் ஊழியர் வருகிறார். சன்னிதானத்தைச் சந்திக்கும் முன் ஆதீனச் சம்பிரதாயங்களை சொல்லிக் கொடுக்கிறார்.

''உள்ளே நுழைந்ததும் சன்னிதானத்தின் காலடியில் சாஷ்டாங்கமா விழுந்து வணங்கணும். அவர் பேசும்போது 'சரி’ன்னு சொல்லக் கூடாது. 'உத்தரவு’னு சொல்ல ணும். சன்னிதானம் கொஞ்சம் அதிக மாப் பேசுவார். அதுக்காக, இடையிலேயே எந்திரிச்சுப் போயிரக் கூடாது. கிளம்பும் போது, அவரைப் பார்த்துக்கிட்டே பின்னாடிதான் நடந்து போகணும்!''- அவர் சொல்லச் சொல்ல... நமக்குக் கண்ணைக் கட்டுகிறது.

ஸ்கூல் பெல் போன்ற பெரிய மின்சார மணி ஒலிக்கிறது. ''சன்னிதானம் அனுமதி கொடுத்துட்டார். நீங்க உள்ளே போகலாம்!'' என்று அனுப்பிவைக்கிறார் அந்த ஊழியர். உள்ளே பிரமாண்ட ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து இருந்தார் சன்னிதானம். ஆசீர்வதித்து, விபூதியும் ஞானப்பாலும் கொடுக்கிறார். சாமியின் 'உத்தரவு’ கிடைத்ததும் பேட்டி தொடங்கியது.

''சாமி, நீங்க மடாதிபதி ஆகலைன்னா, என்னவா ஆகி இருப்பீங்க?''

''ஐ.பி.எஸ். அதிகாரி ஆகி இருப்பேன். சென்னையில் நிருபரா இருந்தபோது அதிகாரப்பூர்வமா இல்லாமல், போலீஸ் அதிகாரிகளிடம் பயிற்சி எடுத்தேன். உயர் அதிகாரிகளிடம் எப்படி வயர்லெஸ்ஸில் பேசுவது என்பதையும் கற்றுக்கொண்டேன்!'' (ஆசனத்தில் இருந்து எகிறிக் குதித்து இறங்குகிறார். 'அந்நியன்’ விக்ரம்போல ஒரே நேரத்தில் எஸ்.பி. ஆகவும், டி.ஐ.ஜி. ஆகவும் 'ஸ்பிளிட் பெர்சனாலிட்டி’ அவதாரம் எடுக்கிறார் சந்நிதானம்!)

''மைக் 9 டு மைக் 2 ஓவர்!''

''சார், குட் ஈவினிங் சார். மைக் 2 ரிசீவ்டு மைக் 9 சார்!''

''மிஸ்டர் அருண்... ஐ ஹேவ் அல்ரெடி இன்ஸ்ட்ரக்ட் டு யு லாஸ்ட் நைட். வில் யு எக்ஸ்கியூட் தட் ஆர் நாட்?''

''சார், ஐ ஹேவ் இம்மீடியட்லி எக்ஸ்கியூட்டட் சார். ஐ ஹேவ் ரிமாண்டடு ஃபோர் பெர்சன்ஸ் இன் கஸ்டடி சார். ஓவர் சார்!''

''தேங்க்யூ அருண்... கேரி ஆன். ரோஜர்!''

''இப்போ நீங்க அருண் யாருன்னு யோசிப்பீங்களே? (சாமி முகத்தில் பெருமிதம் கலந்த எதிர்பார்ப்பு!) அன்று அதுதான் அடியேனின் சுருக்கப் பெயர். ரிசர்வ் போலீஸ் எஸ்.ஐ. ஆவதற்கான அமைப்பு நமக்கு வந்தபோது, சைமல்டேனியஸ்லி ஐ ரிசீவ்டு எ ஆர்டர் ஃப்ரம் தி மதுரை ஆதீனம். ஜூனியர் ஆதீனகர்த்தரா என்னைப் பட்டம் சூட்டப் போவதாகச் சொல்லி எனக்கு முந்தைய சன்னிதானம் உத்தரவு போட்டார். ஒரு வேளை நான் எஸ்.பி., டி.ஐ.ஜி. ஆகி இருந்தால்கூட நான் மேல் அதிகாரிகளுக்குப் பணிந்து நடந்து இருக்க வேண்டும். இப்போது நான் கிங் ஆஃப் மதுரை ஆதீனம். அதாவது, ஐ.ஜி, ஆஃப். ஐ.ஜிஸ், டி.ஜி.பி. ஆஃப் டி.ஜி.பிஸ்!''

''ஓ... அதான் சைரன் கார், புல்லட் பைக், துப்பாக்கினு வலம் வந்து உங்க போலீஸ் ஆசையைத் தணிச்சுக்குறீங்களோ?''

''ஆமா... ஆமா! நான் கார்ல போகும் போது யாராவது டிராஃபிக் கான்ஸ்ட பிளைப் பார்த்தால், உற்சாகமாகி டாட்டா காட்டுவேன். 9 எம்.எம்., 13 எம்.எம். துப்பாக்கி, பிஸ்டல் எல்லாம் நமக்கு ஆபரேட் பண்ணத் தெரியும். ஆனா, இங்கே இருக்கிற பாரம்பரியத் துப்பாக்கிகள் பார்வைக்குத்தானே தவிர, பயன்படுத்த அல்ல!''

''ஆமா, ஏன் வர்றவங்களுக்கு எல்லாம் ஞானப் பால்னு ஏதோ ஒண்ணு தர்றீங்க?''

''மதுரை ஆதீனத்தை நிறுவி அருளியது சைவ சமயத்தின் தனிப் பெரும் தலைவரான திருஞான சம்பந்தப் பெருமான். அவர் ஞானப் பால் குடித்து வளர்ந்தவர் இல்லையா? அதனால்தான், ஆதீனத்துக்கு வருகை தரும் பக்தகோடிகள் அனைவருக்கும் ஞானப்பால் வழங்குகிறோம். அதன் பலன் அருந்தியவர்களுக்கும் தெரியும். அடியேனுக்கும் தெரியும். எதற்காக விளம்பரம் செய்ய வேண்டும்? நீங்கள் இப்போது ஞானப்பால் குடித்து இருக்கிறீர்கள். இன்னும் சில நாட்களில் உங்களுக்கும் தெரியும்!''

''திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கிடைச்ச மாதிரி, திடீர்னு உங்க ஆதீன மடத்தில் கோடிக் கோடியா நகைகள் கிடைச்சா, என்ன பண்ணுவீங்க?''

(ஆதீனத்தின் முகம் வாடுகிறது. சுத்தத் தமிழில் இருந்து பேச்சுத் தமிழுக்கு மாறுகிறார்) ''ஆமா, வரவேண்டிய வருமானமே வர மாட்டேங்குது. தஞ்சை மாவட்டத்துல கஞ்சனூர், திருப்புறம்பியம், கச்சனம், திருக்குவளை பன்னத்தெருன்னு நாலு இடத்துல ஆதீனத்துக்குச் சொந்தமான சிவன் கோயில்கள் இருக்குதுங்க. அங்கே கோயில் நிலம் எல்லாம் நிறையத்தான் இருக்குது. ஆனா, ஒருத்தன்கூட ஒழுங்காக் குத்தகையைக் கொடுக்க மாட்டேங்குறான். ஒருவேளை, கோயில்ல இருந்து திடீர்னு புதையல் மாதிரி நகை கிடைச்சுதுன்னா, (சாமியின் கண்கள் மின்னுகின்றன.) அதை முறைப்படி சாமிக்கு சாத்தப்படி செய்து, திருவிழாக்கள் நடத்தலாம். என்னதான் நான் ஆதீனத்தின் பேரரசராக இருந்தாலும், சாமி நகை... சாமிக்குத்தான்!''

''சாமி இங்கிலீஷ்ல போட்டு பொளந்து கட்டுறீங்களே.. என்ன படிச்சு இருக்கீங்க?''

''பள்ளிப் படிப்பை முடித்ததும், தருமை ஆதீனத்தில் திருக்கூடத்து அடியவராக அமர்ந்து ஆதீனப் பயிற்சி பெற்றேன். அப்போது எனக்கு ஞானப் பயிற்சி ஊட்டியது தருமை ஆதீனத்தின் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். அவர்தான் எனக்கு ஞானத் தந்தை. பின்பு எம்.ஏ. தத்துவம் பயின்றேன். 1975-ல் மதுரை ஆதீனத்தின் இளவரசராகவும், 1980-ல் பேரரசராகவும் பட்டம் ஏற்றேன். இப்போதும் படித்துக்கொண்டே இருக்கிறேன். ஐ’யம் ஸ்டடியிங். வி ஹேவ் டு லேர்ன் மோர் அண்ட் மோர் எபவுட் த ஹோல் வேர்ல்டு!''

''ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தார். நீங்க ஏன் இருக்கலை?''

(தாடை தடவி யோசிக்கிறார்) ''ஆன்மிக வாதிகள் நாட்டின் நலன் கருதி இப்படிப்பட்ட போராட்டங்களில்

ஈடுபடுவது வரவேற்கத் தகுந்தது. நான் மடாதிபதி என்பதால், போராட வேண்டிய தேவை இல்லை. என் மானசீக ஆதரவு இருந்தாலே போதும்... நல்லதே நடக்கும்!''

''2012-ல் உலகம் அழிஞ்சிடும்னு சொல்றாங்களே சாமி?''

''எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, அது உண்மைதான். 2012 டிசம்பர் 21-ம் தேதிக்குள் உலகம் படுபயங்கரமான அழிவைச் சந்திக்கும். கடல் இல்லாத இடங்களில் பூகம்பம் வரும். மலைச் சரிவு வரும். சுனாமி வரும். மயன் காலண்டர் அதைத்தான் சொல்கிறது. விஞ்ஞானிகளால் மட்டும் அல்ல.. ஆன்மிகத்தால்கூட அந்த அழிவைத் தடுக்க முடியாது. அது மாத்திரம் அல்ல; சில கிரக நிலைகள் மோசமாக இருக்கின்ற காரணத்தினால், வருகிற அக்டோபர் மாதம் பல இடங்களில் பயங்கரமான அழிவுச் சம்பவங்கள் ஏற்படும். எனவே, அனைவரும் பத்திரமாக இருந்துகொள்ளுங்கள்!''