வெளியிடப்பட்ட நேரம்: 05:24 (22/02/2017)

கடைசி தொடர்பு:10:59 (22/02/2017)

பாலாவின் படத்தில் நடிக்கிறாரா ஜோதிகா…?

திருமணத்துக்குப் பின் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார், நடிகை ஜோதிகா. 36 வயதினிலே படத்தில் இருந்து தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் ஜோதிகா, தற்போது `குற்றம் கடிதல்` படத்தின் இயக்குநர் பிரம்மாவின் இயக்கத்தில், `மகளிர் மட்டும்` என்னும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வேலைகள் முடிந்தபின், இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க