சல்மானுடன் இணையும் ஜிவி பிரகாஷ்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களோடு தற்போது பணியாற்றி வரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

விஜய் இயக்கி வரும் 'தாண்டவம்', பாலாவின் 'பரதேசி', வெற்றிமாறன் - தனுஷ் இணையும் படம், பாரதிராஜா இயக்கி வரும் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதுமட்டுமன்றி இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் 'ஜோக்கர்', அனுராக் கஷ்யாப் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'GANGS OF WASSEYPUR' ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். GANGS OF WASSEYPUR திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருக்கிறது.

தெலுங்கில் வெளிவந்த 'கிக்' அங்கு பலத்த வரவேற்பைப் பெற்றது. அதன் தமிழ் ரீமே ஜெயம் ரவி, தமன்னா, ஷாம் நடிப்பில் 'தில்லாலங்கடி'யானது.

இப்படம் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. சல்மான்கான் தான் நாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் "பெரிய டைரக்டர்களுடன் பணியாற்றுவது ரொம்ப பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு டைரக்டரிடமும் பல புது விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. தமிழ் படங்களை முடித்த பிறகு சல்மான்கான் நடிக்க இருக்கும் படத்திற்கு இசையமைக்க இருக்கிறேன் "என்று தெரிவித்துள்ளார்.

'கொசுறு' கபாலி : "   தாண்டவம் படத்துல ஒரு இங்க்லீஷ் பாட்டு போட்டிருக்காராம் ஜிவி.. கோலிவுட்.. பாலிவுட்.. ஹாலிவுட்..? "

Do you like the story?

Please Appreciate the Author by clapping!