வெளியிடப்பட்ட நேரம்: 05:44 (23/02/2017)

கடைசி தொடர்பு:13:02 (23/02/2017)

அரவிந்த்சாமி படத்தில் போலீசாக நடிக்கிறார் சிம்ரன்!

'வாரணம் ஆயிரம்' படத்துக்குப் பின், சில படங்களில் கெளரவ தோற்றத்தில் நடித்துவந்த சிம்ரன், தற்போது மீண்டும் பெரிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்.

அரவிந்த்சாமி நடிப்பில், இயக்குநர் செல்வாவின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்தப் படத்தில், சிம்ரனுடன் நடிகை நந்திதாவும் போலீஸாக நடிக்க உள்ளார்.

பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்தப் படத்தில், ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி ஆகியோரும் நடிக்க உள்ளனர். இமான் இசையமைக்க உள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க