விஜய் யேசுதாஸ் நடிக்கும் 'படைவீரன்' | Vijay Yesudas starring 'Padaiveeran'

வெளியிடப்பட்ட நேரம்: 11:14 (23/02/2017)

கடைசி தொடர்பு:11:26 (23/02/2017)

விஜய் யேசுதாஸ் நடிக்கும் 'படைவீரன்'

Padaiveeran

பிரபல பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ், முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் 'படைவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. புதுமுகம் அம்ரிதா  கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது, படைவீரன்.

'கடல்', 'ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த தனா, இந்தப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'காஞ்சனா 2,' 'நெடுஞ்சாலை'  ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ராஜவேல் மோகன், இதில், ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க