வெளியிடப்பட்ட நேரம்: 03:08 (24/02/2017)

கடைசி தொடர்பு:09:18 (24/02/2017)

அர்விந்த் சுவாமி படத்தில் சிம்ரன்!

கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்துக்குப் பிறகு, முழுநீள வேடம் அல்லாமல் 'ஆஹா கல்யாணம்,' 'த்ரிஷா இல்லனா நயன்தாரா,' 'கரையோரம்,' 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துவந்தார், நடிகை சிம்ரன். தன் கணவர் நடிக்கும் படத்தின் தயாரிப்பு வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார்.

Simran

தற்போது, செல்வாவின் இயக்கத்தில் அர்விந்த் சுவாமி நடிக்கும் படத்தில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சிம்ரன். இதன் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும், படத்தில் சிம்ரனுக்கு சவாலான வேடம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் 'இறுதிச்சுற்று' ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி ஆகியோரும் நடிக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க