அஜீத் படத்துக்காக தயாராகிறதா பிரபல சென்னை திரையரங்கம்...?

Kaasi theatre

சென்னையில் இருக்கும் பிரபலமான திரையரங்குகளில் கிண்டி அருகே அசோக் நகரில் இருக்கும் காசி திரையரங்கமும் ஒன்று. காசி திரையரங்கத்தின் முதல் நாள் காட்சியை, அவர்கள் படம் வெளியாகும் போது நடிகர்கள் பலரும் பார்க்க விரும்புவர். தற்போது, காசி திரையரங்கில் சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, அஜீத் நடிப்பில் விரைவில் வெளிவருப் போகும் 'விவேகம்' திரைப்படம் வெளியாகும்போது, சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காசி திரையரங்கம் திறக்கப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

விவேகம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதற்கே, படத்துக்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியுள்ள நிலையில், படம் வெளியாகும் போது மாஸ் ஓபனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காசி தியேட்டரும் அன்று மாஸாக ஓபனாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!