நாளை காலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா #Oscar2017

89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில் மூன்லைட், லா லா லேண்டு, ஹேக்சா ரிட்ஜ், லயன் போன்ற படங்கள் பல பிரிவுகளில் பரிந்துரைப் பட்டியலில் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கான விருதையும் எந்தப் படம் வெல்லும் என்பதை அறிய  உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. விருது வென்ற பிரபலங்கள் ஆற்றவிருக்கும் உரை எப்படியிருக்கும் என்றெல்லாம் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக பரிந்துரைப் பட்டியலில் இருக்கும் பிரபலங்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தும் வண்ணம், விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய  அகாடமி விருது அமைப்பின் தலைவர் செரில் பூன் ஐசாக், அமெரிக்க அதிபர் ட்ரம்பை சாடியிருந்தார். இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும் ட்ரம்புக்கு எதிரான குரல்கள் மேடையில் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!