உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார், நடிகர் தனுஷ்! | Dhanush appeared in Madurai high court

வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (28/02/2017)

கடைசி தொடர்பு:12:57 (28/02/2017)

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார், நடிகர் தனுஷ்!

Madurai High court

மதுரை மேலூர் தம்பதியினர், நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில், தனுஷை நேரில் வந்து ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனுஷ்

 

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி நீதிமன்றத்தில் இன்று ஆஜரான நடிகர் தனுஷுக்கு அங்க அடையாளங்கள் சரிபார்ப்பு, தனி அறையில் நடந்தது.

'நடிகர் தனுஷ் தங்கள் மகன்' என்று கூறி, மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. இதில், தனுஷ் தங்கள் மகன்தான் என்பதற்கு பள்ளி மாற்று சான்றிதழ்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் கதிரேசன். பதிலுக்கு தனுஷ் தரப்பிலும் சென்னையில் படித்த பள்ளி சான்றிதழ் நகல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில், இரண்டு சான்றிதழின் ஒரிஜினலை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரம், தனுஷ் வழங்கியிருக்கும் பள்ளி சான்றிதழில் பல சந்தேகங்கள் இருப்பதாக கதிரேசன் தரப்பினர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், தனுஷை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தனது தந்தை கஸ்தூரி ராஜா, தாயார் விஜயலட்சுமியுடன் இன்று தனுஷ் உயர்நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அப்போது, நீதிபதி முன்பு தனுஷ் ஆஜரானார். இதையடுத்து, தனுஷின் அங்க அடையாளங்களை மதுரை அரசு மருத்துவமனை டீன் தலைமையிலான மருத்துவர்கள் சோதிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, தனுஷின் உடலில் இருந்த அங்க அடையாளங்களை ஒரு மணி நேரம் மருத்துவர்கள் சோதனை செய்தனர். இதன் அறிக்கையை மார்ச் 2-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் பின்பு நீதிபதி அடுத்த உத்தரவை பிறப்பிக்க உள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் வெளியில் வந்த தனுஷிடம் செய்தியாளர்கள் பேச முயன்றனர். அப்போது, போலீஸார் சூழ்ந்து கொண்டனர். இந்த நிலையிலும், ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று தனுஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், பதில் அளிக்க தனுஷ் மறுத்துவிட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி முழு உடல் பரிசோதனை செய்ததால் தனுஷ் முகம் மிகவும் வாட்டமாக இருந்தது.

செ.சல்மான்

படம்: வீ.சதீஷ்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க