ஜோதிகாவின் கெட்டப் சேஞ்ச் ஏன்? - பூர்ணிமா சொல்லும் ரகசியம்!

ஜோதிகா

'மகளிர் மட்டும்' , 'நாச்சியார்' என வெளியாக இருக்கும் தமிழ்த் திரைப்படங்கள் இரண்டிலும் வெவ்வேறான தோற்றம் ஜோதிகாவுக்கு!. இவ்விரண்டு திரைப்படங்களிலும் ஜோதிகாவுக்கு காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா. மகளிர் மட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் கேமராவோடு மாடர்ன் பெண்ணாக வரும் ’ஜோ’, அப்படியே அதற்கு நேர்மாறாக சட்டையும் லுங்கியுமாக ’நாச்சியார்’ படத்தில் நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டையோடு காட்சியளிக்கிறார்.

இந்த இரண்டு படங்களிலும் கெட்டப் சேஞ்ச் ஏன், எதற்கு? என ஜோதிகாவின் காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமாவிடம் பேசினோம்.

“மகளிர் மட்டும் பட போஸ்டர்ல பாக்குற ஜோதிகாவும் ரியல் லைஃப்ல பாக்குற ஜோதிகாவும் வேற வேற இல்ல. ரெண்டு பேருமே ஒண்ணு தான். ஜோதிகா எனக்கு நல்ல தோழியும்கூட. எப்பவும் துறுதுறுனு இருப்பாங்க. பெரும்பாலும் ஜீன்ஸ் அவங்களோட சாய்ஸ் ஆக இருக்கும். மகளிர் மட்டும் படத்துக்காக இயக்குநர் பிரம்மா சார் அவங்களோட கேரக்டர் எப்படி இருக்கும்னு சொன்னப்ப, அதுக்கேத்த மாதிரி ஆடை இருக்கணும்னு முடிவுபண்ணோம். பேன்ட், ஷர்ட்னு ஜென் ஸீ பொண்ணுக்கான லுக்கைக் கொண்டுவந்தோம்.

ஹேர் ஸ்டைலில் மாற்றம் இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லி ஃப்ரெண்ட் ஹேர் கட் பண்ணிக்கலாம்னு ஐடியா கொடுத்தது ஜோதிகா தான். இந்த ஹேர் கட் பத்தி சரியா சொல்லணும்னா, ‘பேங்ஸ் கட்( Bangs cut)’ என்று சொல்வாங்க. ஜோதிகா ரியல் லைஃப்ல ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மா. ’36 வயதினிலே’ படத்துல ஸ்கூல் படிக்கிற பொண்ணுக்கு அம்மாவா நடிச்சிருப்பாங்க. எல்லாருக்குமே  அவங்களோட அம்மா இமேஜ் தான் மனசுல இருக்கும். அதை உடைக்கணும்னா, அவங்க நேச்சுரலா இருக்குறதே சரினு தோணுச்சு. சாதாரணமாவே, பொண்ணுங்க புடவையில இருக்குறதவிட மாடர்ன் டிரெஸ்ல இருக்கும்போது வயசு குறைவா தெரிவாங்க. அந்த ஃபார்முலாவைத்தான் படத்திலும் அப்ளை பண்ணி இருப்போம். இதுதான் அவங்க சேஞ்ச் ஓவர் ரகசியம்.” என்னும் பூர்ணிமா, நாச்சியார் திரைப்படம் குறித்துப் பேசும்போது,

ஜோதிகா

பொதுவா, பாலா சார் படம்னாலே ஹீரோயின்களுக்கு டார்க் கலர் மேக்கப் போடச் சொல்வாருனு தப்பான இமேஜ் இருக்கு. ஆனா, அது அப்படி இல்லை. பிதாமகன் படத்துல லைலா, பரதேசி படத்துல வரலட்சுமியோ டார்க்கா இருந்தாங்கனு சொல்ல முடியுமா?. கதைக்கு எது தேவையோ அதைதான் செய்ய சொல்வார் அவர். அவர் படங்கள்ல வேலைபார்க்குறதே பெருமிதமான விஷயம். இந்தப் படத்துல போஸ்டர்ல ஜோதிகாவுக்கு லுங்கி, சட்டை காஸ்ட்யூம் இருக்கும். இன்னும்கூட ரெண்டு மூணு காஸ்ட்யூம் படத்துல இருக்கு. அது ஜோதிகாவுக்கான கேரக்டருக்கு மேட்ச் பண்ற மாதிரி இருக்கும். மகளிர் மட்டும் படத்துக்காக தலைமுடியை கட் பண்ணி இருந்தாங்க . இந்தப் படத்துல முடி வளர்ந்து வேற ஒரு லுக்ல இருப்பாங்க. தனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராவே மாறிடுவாங்க ‘ஜோ’. அதான் அவங்க பிளஸ்!’’ என ஜோதிகாவின் பலங்களைப் பட்டியல்போடுகிறார் பூர்ணிமா!

கெட்டப் சேன்ச் இஸ் த சீக்ரெட் ஆஃப் எனர்ஜி!

- பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!