விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் எமிஜாக்சனா? | Is Amy Jackson will act with Vijay Sethupathi?

வெளியிடப்பட்ட நேரம்: 01:23 (13/03/2017)

கடைசி தொடர்பு:09:49 (13/03/2017)

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் எமிஜாக்சனா?

கடந்த வருடம், 'கெத்து' மற்றும் 'தெறி' படங்களில் நடித்தார் எமிஜாக்சன். அது மட்டுமின்றி, பிரபுதேவா நடித்த 'தேவி' படத்தில் சல்மார் பாடலில் மட்டும் தலை காட்டினார். சமீபத்தில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் '2.0' படத்தின் படப்பிடிப்பை முடித்தார்.

விஜய்சேதுபதி, எமிஜாக்சன்

தற்போது, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' படங்களை இயக்கிய கோகுல், விஜய் சேதுபதியைவைத்து இயக்கவிருக்கும் படத்துக்காக எமிஜாக்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படம், ஆக்‌ஷன் காமெடியாக உருவாகவிருக்கிறது. வரும் ஆகஸ்ட்டில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க