பவர்பாண்டியுடன் மோதும் கடம்பன்

'பெங்களூர் நாட்கள்' படத்திற்குப் பிறகு, ஆர்யா நடித்துவந்த ஒரே படம் 'கடம்பன்'. 'மஞ்சப்பை' இயக்குநர் ராகவன் இப்படத்தை இயக்கிவருகிறார். ஆர்யா நடிக்கும் 'கடம்பன்' ஏப்ரல் 14-ல் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

ஆர்யா கடம்பன்

காட்டுப்பகுதியில் வசிக்கும் கடம்பன் கேரக்டருக்காக உடலமைப்பை மாற்றி நடித்திருக்கிறார் ஆர்யா. கேத்ரின் தெரஸா, சூப்பர் சுப்பராயன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது குறிப்பிடத்தக்கது. யுவன் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார். படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்பொழுது நடந்துவருகின்றன.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்தை, ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் வெளியிடவிருக்கிறது. கடம்பன் வெளியாகும் ஏப்ரல் 14-ம் தேதி, தனுஷ் இயக்கத்தில் 'பவர் பாண்டி' மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'சிவலிங்கா' படங்களும் ரிலீஸாகவிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!