விவேகம் படத்தின் செகண்ட் லுக் வெளியானது! #VivegamManiaAgain

 

 

'சிறுத்தை' சிவா இயக்கத்தில், 'தல' அஜித் நடிக்கும் 57-வது திரைப்படம் 'விவேகம்'. காஜல் அகர்வால் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில், அஜித்துக்கு வில்லனாக நடிப்பது, பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய்! வீரம், வேதாளம் என்ற டைட்டில்களைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் டைட்டிலும் 'வி' என்ற எழுத்தில் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. அஜித் ரசிகர்களிடையே வைரலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தின் செகண்ட் லுக் படம் வெளியாகியுள்ளது. 'இரட்டை இலை' முடக்கத்தைத் தாண்டி, ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கிறது விவேகம்! தவிர பாகுபலி-2 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸான அதே தினத்தில், ஆனந்த அதிர்ச்சியாக விவேகம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், ரத்தக்காயத்துடன் அஜித் இருக்கும் ஸ்டில் ஒன்றை, அந்தப் படத்தின் இயக்குநர் சிவா வெளியிட்டார். 

 

 

'தல' அஜித் - 'சிறுத்தை' சிவா கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம்தான் 'வீரம்'. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் 'கட்டமராயுடு'. 'பவர் ஸ்டார்' பவன்கல்யாண் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் இந்தப் படம், நாளை (மார்ச் 24, 2017) வெளியாக இருக்கிறது. இது மட்டுமன்றி, 'ஜில்லா' படப்புகழ் நேசனின் இயக்கத்தில், பவன்கல்யாண் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம்கூட, அஜித் நடித்த 'வேதாளம்' ரீமேக்தான்! எனவே சிவாவுடன் அஜித் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமான 'விவேகம்' தொடர்பாக, இணையத்தில் வெளியாகும் படங்களைப் பார்த்தே, அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து அதன்மீது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறாராம் பவன் கல்யாண். ஆக 'விவேகம்' ரிலீஸானதும், படத்தைப் பார்த்துவிட்டு, இதன் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க பவன்கல்யாண் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது! 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!