வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (29/03/2017)

கடைசி தொடர்பு:09:24 (30/03/2017)

இந்திய டார்ஜன் 'வனமகன்' ட்ரெய்லர்!

'தனி ஒருவன்', 'போகன்' என்று ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துவந்த ஜெயம் ரவியின் அடுத்த படம், 'வனமகன்'. 'காட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு மனிதன், நகரத்துக்கு வந்து ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்டால் என்ன ஆகும்' என்ற ஒன்-லைனை வைத்து கதைக்களம் அமைத்திருக்கிறார், இயக்குநர் விஜய். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, ஆண்டனியின் படத்தொகுப்பு, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, வேல ராமமூர்த்தி என அனுபவம் வாய்ந்த நடிகர்கள் எனப் பல ப்ளஸ்களுடன், இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது, 'வனமகன்'.