வெளியிடப்பட்ட நேரம்: 22:02 (29/03/2017)

கடைசி தொடர்பு:08:33 (30/03/2017)

கௌதம் மேனன் தயாரிப்பில் 'பொன் ஒன்று கண்டேன்'!

Pon Ondru kandaen

தெலுங்கில் வெளியாகி, பெரும் வெற்றிபெற்ற 'பெல்லி சூப்லு' திரைப்படம், தமிழில் ரீ-மேக் ஆக உள்ளது. இந்தப் படத்தை, இயக்குநர் கௌதம் மேனன் தயாரிக்கிறார். விஷ்ணு விஷால், தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்க, தாமரை பாடல்கள் எழுதியுள்ளார். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு, இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்று கூறாமல், கௌதம் மேனன் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். இந்த நிலையில்... தர்புகா சிவா, கௌதம் தயாரிக்கும் படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.