ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆசை இது தான்!!

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆலோசனைக் கூட்டம்  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.  

rajinikanth

நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் கூட்டம் என்பதால், ரஜினி ரசிகர்கள் அவரை பார்க்க மிகவும் ஆவலுடன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திரண்டுள்ளனர். ஆனால் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை சந்திக்க வரவில்லை முன்னரே அறிவித்துவிட்டார். சத்தியநாராயணா தலைமையில் ரசிகர்களுடன் ஆலோசனை கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்குவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ஏப்ரல் 12ஆம் தேதி முதல் சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.  மாவட்ட வாரியாக ஏப்.12-ம் தேதி முதல் ஏப்.17-ம் தேதி வரை சந்திக்கிறார். 

Rajinikanth
 

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கவே இந்த சந்திப்பு என்று செய்திகள் பரவியது. ஆனால்  ரசிகர்களுடனான இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து எதுவும் பேசப்போவதில்லை என ரஜினி தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபம் முன் திரண்டுள்ள ரசிகர்கள், ”ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைப்போம்”, ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்”, என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!