லேடி சூப்பர் ஸ்டார் படத்தின் டீசரை வெளியிடும் இசைப் புயல்!

நாயகனுடன் டூயட் பாடுவதுதான் நாயகியின் வேலை என்கிற தமிழ் சினிமாவின் ஃபார்முலாவை உடைத்து, தனி நாயகியாக வந்து கலக்க ஆரம்பித்துவிட்டார், நயன்தாரா. இதனால், பிரபல நாயகன்களின் படங்களுக்கு இணையாக, இவரது படங்களும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. எனவே, நயன்தாராவின் படங்களின் வெளியீட்டு விஷயங்களும் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், அவரது புதிய படத்தின் டீசரை வெளியிடப்போவது யார் தெரியுமா? நம்ம ஆஸ்கர் நாயகன், இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான். 

'அறம்', 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர் காலம்' என, நயன்தாராவை மட்டுமே முன்னிறுத்தி, வரிசையாகப் படங்கள் வரப்போகின்றன. ஒவ்வொன்றிலும் வித்தியாசமான வேடங்களில் செம கெத்துடன் நடித்துவருகிறார் நயன்தாரா. இதனால், 'தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்' என்று அவரை அழைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் ரசிகர்கள். 

சமீபத்தில் வெளியான, 'டோரா' படத்தைத் தொடர்ந்து, கோபி நைனார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம், 'அறம்'. இதில், நயன்தாரா கலெக்டராக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசரைத்தான், இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!