மூன்று நாள்களுக்கு விமர்சனம் வெளியிடாதீர்கள்..! - விஷால் வைக்கும் கோரிக்கை

'திரைப்படம் வெளியாகி மூன்று நாள்களுக்குப் பிறகுதான் ஊடகங்கள் விமர்சனம் வெளியிட வேண்டும்' என்று நடிகரும்  தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நெருப்புடா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று நடைபெற்றது.  சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் நடந்த இந்த விழாவில், ரஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

vishal
 

சத்யராஜ்,விஷால், தனுஷ், நாசர்,விவேக், லாரன்ஸ், விக்ரமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய விஷால், ’ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாள்களுக்கு, எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் விமர்சனம் வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

vishal, nerupuda
 

விஷாலைத் தொடர்ந்து லாரன்ஸும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். விழாவில் பேசிய லாரன்ஸ், ’படம் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகுதான், படத்தைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றார்

'கத்தி சண்டை' திரைப்பட ஆடியோ ரிலீஸ் விழாவின்போது, இதே கோரிக்கையைத்தான் முன்வைத்தார் விஷால். தற்போது, தயாரிப்பாளர் சங்கத் தலைவரான பிறகும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!