##~## |
''2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையில், எங்கள் கட்சி சுத்தமானது என நிரூபித்து வெளியே வரும்!''
- கனிமொழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''எனக்கு காமராஜரைத் தெரியும், காங்கிரஸைத் தெரியாது; எம்.ஜி.ஆரைத் தெரியும், அ.தி.மு.க-வைத் தெரியாது; கலைஞரைத் தெரியும், தி.மு.க-வைத் தெரியாது; விஜயகாந்த்தைத் தெரியும், தே.மு.தி.க-வைத் தெரியாது!''
- எஸ்.ஏ.சந்திரசேகரன்
''காங்கிரஸ் எப்போதும் தோழ மைக் கட்சிகளின் உள்விவகாரங் களில் தலையிடுவது இல்லை!''
- தங்கபாலு
''ஆ.ராசாவை ராஜினாமா செய்யவைத்து, தி.மு.க. ஜனநாயகரீதியில் உயர்ந்துவிட்டது!''
- கி.வீரமணி

''ஊழல் என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடிய அளவுக்குத் தன்னை உத்தமியாகக் கருதிக்கொண்டு, ஜெயலலிதா ஊழலைப்பற்றிக் கேள்வி கேட்கலாமா?''
- கருணாநிதி
''தேர்தல் நேரத்தில் பேசக் கூடாது என்றுதானே சிறையில் அடைத்தீர்கள். இதோ வந்துவிட்டேன். இனி, நான் பேசுவதை உங்களால், தடுக்க முடியாது... தாங்கவும் முடியாது!''
- சீமான்
