வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (11/04/2017)

கடைசி தொடர்பு:18:05 (11/04/2017)

பாரதிராஜாவின் திரைப்படக் கல்லூரியை திறந்துவைக்கிறார்கள் ரஜினி-கமல்

'பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற பெயரில், புதிய திரைப்படப் பயிற்சிக் கல்லூரியைத் தொடங்குகிறார், பாரதிராஜா. இந்தத் திரைக் கல்லூரியை, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் திறந்து வைக்க உள்ளனர். 

ர்க்

பாலுமேகேந்திரா, தான் சினிமாவில் கற்ற நுணுக்கங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல, 'சினிமா பட்டறை' என்ற திரைப்படப் பயிற்சிக் கல்லூரியை நடத்திவந்தார். அவர் மறைந்த பிறகு, அந்தக் கல்லூரி பெரிதாக இயங்கவில்லை. இந்த நிலையில், பாலுமகேந்திரா பாணியில் பாரதிராஜாவும் திரைப்படக் கல்லூரியைத் தொடங்குகிறார்.' பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க உள்ளார். இதன் திறப்பு விழாவுக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாரதிராஜாவின் திரைக் கல்லூரியில், இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம், பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுஹாசினி, ராதா, ராதிகா, மனோபாலா உள்ளிட்டோரும் கௌரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.