Published:Updated:

அம்பேத்கர் வாய்ஸ்ல பேசுடா!

இர.ப்ரீத்தி, படங்க்ள் : ச.இரா.ஸ்ரீதர்

பிரபலங்களின் குரலில் மிமிக்ரி செய்து கலாட்டா கலகலப்பு கூட்டும் ஹீரோக்கள், தாங்கள் ஜீரோக்கள் ஆன சம்பவங்களை இங்கே அடுக்குகிறார்கள்...

அம்பேத்கர் வாய்ஸ்ல பேசுடா!

'கோவை’ குணா: ''ஒரு கல்யாண வீட்டில் புரொகிராம்.  செம தடபுடல் வரவேற்பு. மைக் பிடிச்சு கவுண்டமணி, எம்.ஆர்.ராதா குரலில் பேசினா அப்ளாஸ் அள்ளுது. ஒரே ஒரு பாட்டி மட்டும், 'அந்தத் தம்பி எவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்குது... எல்லாம் ஏன் சிரிக்கிறீங்க’ன்னு திட்டுச்சு. அதுக்கு இன்னும் அள்ளுது சிரிப்பு. புரொகிராம் முடிஞ்சு பைசா கேட்டா, 'நாங்க உங்களைக் கூப்பிடவே இல்லையே... நீங்களாதானே வந்தீங்க’ன்னு அதுவரை சிரிச்சவங்கலாம் முறைக்க ஆரம்பிச் சிட்டாங்க. 'என்னடா இது புது வம்பு’னு விசாரிச்சா, நான்தான் மண்டபம் மாறி புரொகிராம் பண்ணியிருக்கேன். அடிச்சுப் புடிச்சு அந்த மண்டபத்துக்குப் போனா, கல்யாணம் முடிஞ்சு காலி பண்ணிட்டுப் போய்ட்டாங்க. என்னைப் பார்த்து நானே சிரிப்பா சிரிச்சுக்கிட்டேன்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அம்பேத்கர் வாய்ஸ்ல பேசுடா!

அர்ஜூன்: ''நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கும்போதே மிமிக்ரி  போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். 'ஒன் பை ஒன்’ கேள்வி- பதில் ஸ்டைலில் அப்பா எனக்குப் பயிற்சி கொடுத்திருப்பார். நானும் ஆர்டர் மாறாம மனப்பாடம் பண்ணி வெச்சிருவேன். ஒரு தடவை நிகழ்ச்சியில், டீச்சர்-ஸ்டூடன்ட் காமெடி பண்ணோம். டீச்சரா நடிச்ச அங்கிள் ஆர்டர் மறந்து இங்கிலீஷ் பாடத்துக்குப் பதிலா சயின்ஸ் கேள்வி கேட்டார். உடனே பதற்றமாகி, 'அங்கிள் ஆர்டரை மாத்தாதீங்க... நான் மறந்துடுவேன்’னு கேமரா ரோல் ஆகிட்டு இருக்கும்போதே சொல்லிட்டேன். எல்லோரும் சிரிச்சிட்டாங்க. ஷேம் ஷேம்... பப்பி ஷேம் ஆகிருச்சு!''

அம்பேத்கர் வாய்ஸ்ல பேசுடா!

'ரோபோ’ ஷங்கர்: ''அன்னிக்கு நான் பண்ண  ஷோவுக்கு வி.எஸ்.ராகவன்தான் சிறப்பு விருந்தினர். அவரை இம்ப்ரெஸ் பண்ணணும்னு அவரோட குரல்ல பேசினேன். நான் பேசி முடிச்சதும், 'இப்படித்தான் எல்லாரும் என்னை மாதிரி பேசுறேன்னு தப்புத் தப்பா பெர்ஃபார்மன்ஸ் பண்றாங்க. நான் என்ன இப்படியா தலையை ஆட்டி ஆட்டிப் பேசுறேன்’னு கடுப்பாயிட்டார். எனக்கு வியர்த்துக் கொட்டி பதற்றமாகிருச்சு. அப்புறம்லாம் வி.எஸ்.ராகவன் மாதிரி பேசுனா, தலையை ஆணி அடிச்ச மாதிரி ஒரே இடத்தில் நிறுத்திவெச்சுட்டுத்தான் பேசுறது!''

அம்பேத்கர் வாய்ஸ்ல பேசுடா!

ஆதவன்: ''எனக்கு இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜாவும், யுவனும் நல்ல நண்பர்கள். ஒவ்வொரு வருஷமும் அவங்க வீட்டு கொலுவில் தவறாம கலந்துக்குவேன். போன வருஷம் யுவன், ராஜா சார் மாதிரி பாடச் சொன்னார். நான் சீரியஸா பாடிட்டு இருக்கேன். அப்போ அங்கே வந்த கார்த்திக் ராஜா நான் பாடி முடிக்கிற  வரை அமைதியா இருந்துட்டு, 'யாரோட குரல்டா? ரொம்பப் புதுசா இருக்கே’னு ஆச்சர்யமா கேட்டார். இதைக் கேட்டதும் யுவன் விழுந்து விழுந்து சிரிக்கிறார். இதுதான் ஆதவன் அசிங்கப்பட்ட கதை!''

அம்பேத்கர் வாய்ஸ்ல பேசுடா!

மைக்கேல்: ''எப்போ எங்கே மிமிக்ரி பண்ணப் போனாலும், 'உங்களுக்கு என்ன வாய்ஸ் வேணும்னு சொல்லுங்க... பேசிக் காட்டுறேன்’னு கேப்பேன். பெரும்பாலும் ரஜினி, கமல், விஜயகாந்த்னுதான் சொல்லுவாங்க. மதுரையில் ஒருத்தர் 'அம்பேத்கர் வாய்ஸ்ல பேசுடா’னு அதட்டுனார். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. வாழ்க்கையில் நாம என்னிக்கு அம்பேத்கர் குரலைக் கேட்டிருக்கோம். பக்கு பக்குனு முழிச்சு அசடு வழிஞ்சு சமாளிச்சேன். அதுல இருந்து என்ன வாய்ஸ் வேணும்னு கேட்பதையே நிறுத்திட்டோம்ல!''

அம்பேத்கர் வாய்ஸ்ல பேசுடா!

'வடிவேல்’ பாலாஜி: ''ஒரு தடவை  மேடையில நாலஞ்சு பேரு வந்து என்னைத் தனியா சந்திக்கணும்னு கேட்டாங்க. புரொகிராம் முடிஞ்சு வாங்க பேசலாம்னு சொன்னேன். மேக்கப் கலைச்சிட்டு இருந்த என்னைப் பார்த்துட்டு, 'வடிவேல் பாலாஜி எங்கே?’னு என்கிட்டயே கேட்டாங்க. 'நான்தாங்க வடிவேல் பாலாஜி. மேக்கப்லாம் இல்லாம வெறும் பாலாஜியா இருக்கேன்’னு சொன்னா, ஒரு பயலும் நம்பலை. அப்புறம் அவங்க முன்னாடியே வடிவேலு மாதிரி மேக்கப் போட்டு, பேசிக் காமிச்சதும்தான் விட்டாங்க. என்ன கொடுமைங்க இது?''