Published:Updated:

உஷார்... உளவு... உற்சாகம்!

ஹிலாரியின் சென்னை விசிட்பி.ஆரோக்கியவேல்படங்கள் : கே.ராஜசேகரன்

##~##

'உஷார் பார்ட்டி!’ என்றால்  அமெரிக்கர்கள்தான்!

 அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தாஜ் ஹோட்டல் ஊழியர்களிடம் இயல்பாக நலம் விசாரித்தது, உணவகத்தில் மற்றவர்களுடன் ஒன்றாக உணவருந்தியது... தலைப்புச் செய்திகளாக இவை உங்களுக்குப் பரிச்சயமாகி இருக்கலாம். ஆனால், அதற்குப் பின் அமெரிக்கர்களின் எத்தனை மாத உஷார் உழைப்பு இருக்கிறது தெரியுமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹிலாரி கிளின்டனின் சென்னை நிகழ்ச்சி நிரல் அவர் சென்னையில் தரைஇறங்கும் நாளுக்கு முந்தைய தினம் மதியம் வரையிலும் தமிழகக் காவல் துறையினருக்கு வழங்கப்படவில்லை. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே ஹிலாரி தங்கிய தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் அத்தனை பேரின் பூர்வாசிரமத் தொடர்புகள் துவங்கி, தற்போதைய நடவடிக்கைகள் வரை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். ஹிலாரி, தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த அந்த இரண்டு தினங்களிலும் ஹோட்டலில் வேறு யார் யாரெல்லாம் அறை பதிவு செய்து இருக்கிறார்கள், ஹோட்டல் அறைகளின் பார்வை படும் இடத்தில் இருக்கும் உயரமான அடுக்குமாடிக் கட்டடங்களில் யார் யார் வசிக்கிறார்கள் என்பது வரை அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் துப்பறியும் ஏஜென்சிகளின் உதவியோடு சேகரித்து பரிசோதித்து இருக்கிறார்கள்!

உஷார்... உளவு... உற்சாகம்!

விமான நிலையத்தில் இறங்கிய ஹிலாரியைப் பத்திரிகையாளர்களின் கண்ணிலேயே காட்டாமல், கோட்டூர்புர அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குக் கிட்டத்தட்ட கடத்திச் சென்றுவிட்டது அமெரிக்க கான்வாய். ''அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் சரிசமமாகப் பங்கேற்பதினால் எந்த அளவுக்குச் சாதிக்க முடியும் என்பதை சென்னைவாசிகள் நிரூபித்து இருக்கிறீர்கள். இது போன்ற ஒரு வாய்ப்பு இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடி  மகனுக்கும் கிடைக்க வேண்டும்!'' என்று ஹிலாரி சொன்னபோது, அரங்கத்தில் பலத்த கைதட்டல். கமல், கௌதமி, சுதா ரகுநாதன், ஆற்காடு நவாப் உள்ளிட்ட பிரபலங்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து ஹிலாரியின் 'ஐஸ் நைஸ்’ பேச்சைக் கேட்டார்கள். ஆனாலும், அவர்களில் எவருக்கும் ஹிலாரியிடம் கைகுலுக்கவோ புகைப்படம் எடுத்துக் கொள்ளவோ சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை.

பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கச் சென்றபோது, மரியாதை நிமித்தமாக அவர் வாசலுக்கு வந்து ஹிலாரியை வரவேற்று அழைத்துச் சென்றார். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அந்த 'மரியாதை நிமித்தம் எல்லாம்’ எதிர்பார்க்க முடியுமா ஹிலாரி? லிஃப்ட்டுக்குத் தாமத மாகும் என்று மாடிப்படியிலேயே ஹிலாரி ஏறிச் செல்ல, கைகளை வசதியாக வைத்துக் கொள்ள 'ஆர்ம் ரெஸ்ட்’ கொண்ட சோபாவில் இருந்து எழுந்து ஹிலாரியை வரவேற்றுவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டார் நம் முதல்வர்.  

உஷார்... உளவு... உற்சாகம்!

''உலகத்தில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் பொறாமைப்படும் அளவுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்! உங்கள் கடந்த கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளுக்குப் பாராட்டுகள். உங்களின் சாதனைகள் மிகப் பெரிய வெற்றிக் கதைகளாக இருக்கின்றன!'' என்று ஹிலாரி ஜெயலலிதாவிடம் கூறியதாகப் பிறகு செய்திகள் வெளியாகின. ஆனால், பதிலுக்கு ஜெயலலிதா ஹிலாரியை எப்படியெல்லாம் புகழ்ந்தார் என்று எந்தத் தகவலும் இல்லை. விடை பெறும் சமயம் அமெரிக்காவுக்கு வருமாறு ஹிலாரி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தாராம்.

கமல், சுதா ரகுநாதன் ஆகியோருக்கு எல்லாம் கிடைக்காத வாய்ப்பு சாப்பாட் டுக் கடை நடத்தும், கூடை முடைந்து விற்கும் பெண்களுக்குக் கிடைத்தது. மயிலாப்பூரில் உள்ள ஒரு பெண்கள்

உஷார்... உளவு... உற்சாகம்!

அமைப்புக்கு வந்த ஹிலாரி, அங்கு இருந்த எளிய பெண்களிடம் மொழிபெயர்ப்பாளர்களின் உதவிகூட இல்லாமல் நட்பு உணர்வோடு அவர்களின் கை பிடித்து, தோள் தழுவி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

கலாஷேத்திராவில் மோகினிஆட்டம், கதகளி, பரதநாட்டியம் போன்ற நாட்டியங்களை ரசித்தவர், ''இதற்கு முன்பும் தென்னிந்திய நடனங்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஆனால், உங்கள் முகத் தசைகளின் நுணுக்கமான அசைவுகள் தெரியும் அளவுக்கு இவ்வளவு அருகில் இருந்து பார்ப்பது இதுவே முதல் முறை!'' என்று அவர்களோடு க்ரூப் போட்டோ வும் எடுத்துக்கொண்டார்.

ஆக, இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் ஒரு விஷயம் நன்றாகப் புலப்படுகிறது. அது, 'ஹிலாரி கிளின்டனுக்கு நன்றாக ஐஸ் வைக்கத் தெரிந்திருக்கிறது!’