Published:Updated:

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ஒன்லைன் திரு..!

ந.வினோத்குமார்படங்கள் : சொ.பாலசுப்பிரமணியன்ஓவியங்கள் : ஹரன்

##~##

'ஒன் லைன் திரு!’ - சென்னை ரேடியோ மிர்ச்சி பண்பலையில் 'ஒன் லைன் கதை’கள் சொல்லிக் கலகலப்பூட்டுகிறார் மா.கா.பா. ஆனந்த்.  லாஜிக்பற்றிக் கவலைப்படாமல், வாய்ப் பந்தலில் விளையாட்டு காட்டும் ஜாலி ஜோக்கர் ஆனந்த், புதுவைக்காரர். எம்.பி.ஏ. பட்டதாரி!

''படம் பண்ணலாம்னு மஞ்சப் பையும் கையுமா கோடம்பாக்கத்துக்குள்ள ரவுண்ட் அடிக்கிற 'அறிமுக’ தயாரிப்பாளர்களுக்கு உதவுற மாதிரி ஒரு கதை சொல்லுங்களேன்...'' என்று கேட்டதும் 'ஒன் லைன் திரு’ ஓட்டிய ட்ரெய்லர்கள் இங்கே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நம்மகிட்ட ஒரு சிரிப்பு போலீஸ் கதையே இருக்கு. தீபாவளி கொண்டாட ஒரு வீட்டுக்கு சொந்தக்காரங்க லாரி லாரியா வந்து இறங்குறாங்க. கோழி கூவுது 'காபி... காபி... காபி!’ மத்தியான சீரியல் முடியுது... 'சோறு... சோறு... சோறு’! எட்டு மணி வெதர் ரிப்போர்ட் முடியுது... 'தோசை... தோசை... தோசை!’ இப்டியே இருவது நாளு இவனுங்க மூக்குப் பிடிக்கத் தின்னதுல, அந்த ஊர்ல பாதி விவசாயம் அழிஞ்சேபோச்சு.

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ஒன்லைன் திரு..!

ஊருக்கு வெளியே ஆல மரத்துக்கு அடியில பொண்டாட்டி செத்த துக்கத்துல தாடிவெச்சு உக்காந்திருந்த ஹீரோகிட்ட சொந்தக்காரங்களை எப்படி வெரட்டறதுன்னு அந்த வீட்டுக்காரன் ஐடியா கேக்குறான். அதுக்கு நம்ம ஆளு  சிம்பிளா மிகப் பெரிய ஐடியா ஒண்ணு கொடுக்குறான். சந்தோஷமா

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ஒன்லைன் திரு..!

திரும்பி வந்த வீட்டுக்காரன், எல்லா சொந்தக்காரங்களையும் கூப்ட்டு, 'இன்னிக்கு நாம எல்லோரும் திருடன் - போலீஸ் விளையாட்டு விளையாடுறோம். யாரு வந்து கேட்டாலும் 'நாந்தான் திருடன்’னு எல்லாரும் சொல்லணும்’னு சொன்னான். அவங்களும் ஓ.கே. சொல்லி திருடன் - போலீஸ் விளையாட்டு ஆரம்பிச்சுட்டாங்க. எல்லா சொந்தக்காரங்களும் வேற வேற வீட்டுல போயி ஒளிஞ்சுக்கிட்டாங்க.

இப்ப நம்ம வீட்டுக்காரன் போலீஸுக்கு போன் போட்டு, 'சார், எங்க தெருவுல நிறைய திருடனுங்க ஒளிஞ்சுக்கிட்டு இருக்கானுங்க. ஜீப், லாரின்னு என்னலாம் இருக்கோ எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கமான் க்விக்’னு சொன்னான். படத்தோட க்ளைமேக்ஸ் என்னான்னு நினைக்கிற... போலீஸ் வந்து சொந்தக்காரத் திருடனுங்களைப் புடிச்சாங்களா... இல்லை அவங்களும் சேர்ந்து சொந்தக்காரங்களோட போலீஸ் விளையாட்டு விளையாடினாங் களா அப்டிங்கிறதுதான்!''

''திரு... ஹீரோயின் என்ட்ரியே இல்லையே... லவ் ஸீனு... டூயட்... எப்போ?''

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ஒன்லைன் திரு..!

''அப்டிங்கிற! ஹீரோயின் ஒண்ணுதான். ஆனா, ஹீரோ ரெண்டு. புடிச்சிக்கோ இந்த முக்கோணக் காதல் கதையை. படத்தோட ஓப்பனிங்ல 'பப்பரப்பா’னு ஒரு போஸ்ட் ஆபீஸைக் காமிக்கிறோம். அங்கே அழகா ஒரு ஹீரோயின். கரஸ்பாண்டன்ஸ்ல எம்.பி.ஏ. படிக்கிறதுக்காக அப்ளிகேஷன் அனுப்ப ட்ரை பண்ணிட்டு இருக்கா. அப்ப பார்த்து ஸ்டாம்ப் ஒட்டுற கம் தீர்ந்துபோச்சு. அழுவாச்சி அழுவாச்சியா ஹீரோயின் திரும்பிப் பார்த்தா, ரெண்டு ஹீரோவும் முஷ்டி முறுக்கி நிக்குறாங்க. ஹீரோயின் கண்ணுல தண்ணிய வெச்சுண்டு, 'யார் எனக்கு ஸ்டாம்ப் ஒட்ட கம் எடுத்துட்டு வர்றாங்களோ... அவங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்’னு உருகி மருகி டயலாக் சொல்றா. டக்குனு ரெண்டு ஹீரோவும் நாய் துரத்துற பூனை கணக்கா பிரிச்சடிச்சிட்டு ஓடுறானுங்கோ.

கால் அவர் ஆச்சு... கால் அவர் ஃபோர் அவர் ஆச்சு. அந்த நேரம் பார்த்து சைக்கிள் கேப்புல சிந்துபாத் வந்த மாதிரி, டக்குனு நம்ம போஸ்ட் மாஸ்டர் வந்தாரு. ஸ்டாம்ப்பை எடுத்து 'ப்ளக் ப்ளக்’னு நாக்குல தடவி, பட்டுனு கவர்ல ஒட்டி, 'படார்’னு தட்டி போஸ்ட் பாக்ஸ்ல போட்டாரு. ஒரு ஹீரோ வீட்டுக்குப் போயி கோந்தைக் கிண்டி வாளி நிறைய கொண்டுவந்து நின்னான். இன்னொரு ஹீரோ 'அவ 'ஒட்டகம்’தான் கேட்டானு ராஜஸ்தானுக்கே போயி, நிஜ ஒட்டகத்தை இழுத்துட்டு வந்து நின்னான். இப்ப நம்ம படத்தோட க்ளைமாக்ஸே நம்ம ஹீரோயின் யாரை செலெக்ட் பண்ணாங்குறதுதான். அவ்ளவுதாம்பா!''

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ஒன்லைன் திரு..!

''போ திரு... கதையில ஹீரோவுக்குச் சரியான 'பஞ்ச்’ இல்லையே. பஞ்ச் டயலாக் லயே சும்மா பொறி பறக்கணும். பேரரசு திகைச்சு நிக்கணும்!''

''இந்தா வாங்கிக்கோ. ஓப்பனிங் ஸீன்லயே நம்ம ஹீரோ ஹாஸ்பிட்டல்ல குழந்தையாப் பொறக்குறான். 'குவா... குவா...’ சூப்பரா இருக்குற நீ நர்ஸு... ஜாக்கிரதை எங்க அப்பாவோட பர்ஸு! ஸ்கூல் படிக்கிற காலத்துல 'இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்... நீதான்டா என் பிரின்ஸிபால்!’ இப்டியே படிப்புல உருப்படாமப்போன நம்ம ஹீரோ, ஒரு ஹோட்டல்ல பேரரா ஜாயின் பண்றான். 'இட்லிதான் கூட்டமா வரும்... தோசை சிங்கிளாத்தான் வரும்’னு கஸ்டமர்கிட்ட சொல்லி, உள்ள வேலையும் போக, அப்பதான் ஹீரோயினுக்கும் நம்ம ஹீரோவுக்கும் லவ்ஸ் ஆகுது.

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ஒன்லைன் திரு..!

காதலிகிட்ட நம்ம ஹீரோ 'எண்ணெய் ஊத்துனாதான் எரியும் ஸ்டவ்வு... எண்ணெய் ஊத்தாமலேயே எரியும் நம்ம லவ்வு’னு சொல்றான். அதைக் கேட்டு செம கடுப்பான ஹீரோயின், 'நாலு நாள்  நீ பஞ்ச் டயலாக் பேசாம இருந்தாதான் லவ்வு’ன்னு சபதம் போடுறா. அதை ஏத்துக் கிட்டு நம்ம ஹீரோ சத்திய சோதனையில் ஈடுபடறான். அப்பதான், 'எம் பேரு டோனி... ஆம்பளையா இருந்தா வா நீ’னு பேசி, அவனை வம்புக்கு இழுக்குறாங்க. இவ்வளவு இம்சைகளையும் தாங்கிட்டு அந்த நாலு நாள் நம்ம ஹீரோ பஞ்ச் டயலாக் பேசாம இருந்தானா, இல்லே... ஹீரோயினுக்குத் தெரியாமப்போய் தனியா நின்னு பஞ்ச் டயலாக் பேசினானாங்கிறதுதான் க்ளைமாக்ஸ்!''

''ஓ.கே. பட் படத்துல காமெடியே இல்லையே..?''

''ஓ.கே... வைடு ஆங்கிள்ல ஓப்பன் பண்ணா... ஃபாரின் மாப்பிள்ளை ஒருத்தரு, பொண்ணு பாக்குறதுக்காக ஒரு வீட்ல ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டே இருக்கார். பொண்ணு வரவே இல்லை. அதுக்குள்ள பொண்ணு வீட்ல குடுத்த மிக்சரு, உருளைக் கிழங்கு போண்டாவை ரெண்டு தடவை கேட்டு வாங்கிச் சாப்ட் டாச்சு. எவ்ளோ நேரம்தான் பேசாம இருக் கிறதுன்னு பொண்ணோட அப்பாகிட்ட, 'எவ்ளோ போடுவீங்க’ன்னு கேட்டாரு மாப்பிள்ளை. அதுவரை சந்தோஷமா இருந்த அப்பா உடனே சோகமா தன்னோட ஃப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பிச்சாரு. 'தம்பி, நா இந்த ஊருக்கு வரும்போது ஒரே ஒரு மஞ்சப் பையோடுதான் வந்தேன். அதுக்கப்புறம் என் சொந்த உழைப்புல சம்பாதிச்சு பத்து லட்சம் சேர்த்துவெச்சிஇருக்கேன். எல்லாமே உங்களுக்குத்தான் மாப்ளே!’னு சொன்னாரு. உடனே, அந்த ஃபாரின் மாப்பிள்ளை, 'கல்யாணத்தை இப்பவே வெச்சுக்கலாம்’னு சொல்லி தாலியைக் கட்டி, 'மாமா, எங்கே என் பத்து லட்சம்?’னு கேட்டாரு. 'வாங்க மாப்ளே... இந்த ரூம் உள்ளாறதான் அந்தப் பத்து லட்சம் இருக்கு’னு சொல்லி, 'படார்’னு கதவைத் திறந்தா... ஒண்ணு, ரெண்டு இல்ல... பத்து லட்சம் மஞ்சப் பையை அடுக்கிவெச்சிருக்கான் அந்த 'மஞ்ச’ மாமா. காமெடி க்ளைமாக்ஸ் ஓ.கே-வா?''

''பத்து லட்சம் மஞ்சப் பையா? 'எந்திரன்’ அளவுக்கு பட்ஜெட் தாங்காது. நாம எடுக்கப்போறது லோ பட்ஜெட் ஃபிலிம். அதுக்குத் தக்கன ஃப்ரேம் வைங்க!''

''ஓ.கே. நண்பா... பட பூஜையில் பாட்டு போடுறோம்... பூசணிக்காயை உடைக்கிறோம்... அந்தப் பூசணிக்காய்ல இருந்து ஒரு ரூபா காசு எஸ்கேப்பாகி 'டடான் டைக்கு சிக்கு... டடான் டைக்கு சிக்கு’னு கோடம்பாக்கத்துல இருந்து மவுன்ட் ரோடு வரைக்கும் உருண்டு ஓடுது. அந்த ஒரு ரூபாயை நம்பி நாஷ்டா பண்ணலாம்னு நம்பி இருந்த ஹீரோ அதிர்ச்சியாகி, அதைத் துரத்திட்டு ஓடுறாரு. 'டகுசிகு...

ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ஒன்லைன் திரு..!

டகுசிகு... டகுசிகு’னு ஓடுற காசு, மவுன்ட் ரோடு சிக்னல்ல 'க்க்க்க்ஹ்ஹ்ஹ்ஹ்’னு பிரேக் அடிச்சு நிக்குது. ஹீரோ அந்த ஒரு ரூபாயை எடுக்கக் குனியறப்போ, பின்னாடி ஒரு எருமைக் குரல்ல 'திஸ் இஸ் மை மணி ட்யூட்!’னு மிரட்டுறான் வில்லன். அதுக்கு ஹீரோ, 'வாட் இஸ் த ப்ரூஃப்?’னு கேட்கிறான். அதுக்கு அந்த வில்லன், 'ஒரு சைடு பூ இருக்கும்... இன்னொரு சைடு தல இருக்கும்’னு சொல்றான். 'ஹ்ஹ்ஹாஹா’ன்னு சிரிச்சுக்கிட்டே நம்ம ஹீரோ சொல்றான். 'ஒரு சைடு பூ இருக்குறது கரெக்ட். ஆனா, இன்னொரு சைடு சிங்கம்தான் இருக்கு. சிங்கம்னா சூர்யா... தலன்னா அஜீத். யூ ஆர் ராங். தட் மணி இஸ் மைன்!’னு சொல்லிட்டு, அங்கே வைக்குறோம் பாரு ஒரு ஃபைட்டு!''

''ங்கப்பா சாமி... ஆளை விடுப்பா!''