Published:Updated:

அடிமையாக இருக்கிறார் அம்மா!

ம.கா.செந்தில்குமார்படங்கள் : வி.செந்தில்குமார்

##~##

னிதா விஜயகுமார் - சென்ற ஆண்டின் 'சிறந்த’ பேட்டியாளர். விமான நிலையத்தில் விஜயகுமாரை வியர்க்க விறுவிறுக்க வைத்தது, முன்னாள் கணவரின் கார் பானட்டில் ஏறி போராட்டம் நடத்தியது என்று பரபரப்பைப் பற்றவைத்த வனிதா இப்போது என்னதான் செய்கிறார்?

 ''வழக்கு என்ன ஸ்டேஜ்ல இருக்கு?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''என் மகன் விஜய்ஹரி, என்கிட்ட மூணு நாளும், ஆகாஷ்கிட்ட நாலு நாளும் இருக்கணும்னு ஹைகோர்ட் ஆர்டர். ஆனால், இதுவரை அந்தத் தீர்ப்பு நிறைவேற்றப்படலை. போன மாசம் ஆகாஷ§க்கு போன் பண்ணி குழந்தையை அழைத்துக்கொண்டு வரச்சொன்னேன். 'அவன் வர மாட்டேங்குறான். நான் என்ன பண்றது’னு கேட்கிறார்.  'ஸ்கூலுக்குப் போக மாட்டேன், சாப்பிட மாட்டேன்னு அவன் சொன்னா, அப்படியே விட்டுடுவீங்களா? நீதான் அம்மா நல்லவங்கடானு எடுத்துச் சொல்லி அனுப்பணும்’னு சொன்னேன். 'உன்கிட்ட பேச வேண்டிய அவசியம் இல்லை. கோர்ட்ல பேசிக்கிறேன்’னு போனை வெச்சிட்டார்.''

அடிமையாக இருக்கிறார் அம்மா!

''பொதுவா, அப்பாவைவிட அம்மாவிடம்தானே குழந்தைகள் ஒட்டுதலா இருப்பாங்க. ஆனால், உங்க பையன் மட்டும் ஏன் இப்படி?''

''என் குழந்தை அறியாப் பையன் சார். நான்தான் அவனைக் கஷ்டப்படுத்துறேன்னு எங்க வீட்டுத் தரப்பில் சொல்லித்தர்றாங்க. கூட இருக்குறவங்க சொல்றதைத்தானே அவன் நம்புவான்? பெத்த குழந்தையே வெறுக்கும் என் நிலை எந்தத் தாய்க்கும் வரக் கூடாது. அதனால்தான் இப்ப என் அப்ரோச்சை மாத்தியிருக்கேன்!''

அடிமையாக இருக்கிறார் அம்மா!

''அப்படி என்ன அப்ரோச்?''

''விஜய்ஹரி பிரச்னையால என் மத்த ரெண்டு குழந்தைகளும் பாதிக்கப்படுறாங்க. 'முதல்ல குழந்தைங்களையாவது பழக விடுவோம்’னு ஆகாஷ்கிட்ட கேட்டிருக்கேன். ஆனால், அவங்க சைடுல இருந்து சரியான பதில் இல்லை. ஆனா, இதுல ஒரே ஆறுதலான விஷயம், கடந்த ரெண்டு மாசமா எங்கம்மா என்கிட்ட பேசிட்டு இருக்காங்க. இத்தனை நாளா அவங்களை யாரும் என்னிடம் பேச விடலை. போன்கூட தராம அவங்களை ஒரு அடிமை மாதிரிதான் வெச்சிருந்தாங்க. அவங்க திருட்டுத்தனமா வேலைக்காரங்க போன்ல இருந்து என்கிட்ட பேச வேண்டிய சூழ்நிலையில இருக்காங்க. அவங்க என்கிட்ட பேசுறதைக் கண்டுபிடிச்சி, அவங்களையும் ஒதுக்கிவெச்சுட் டாங்களாம்!''

''அம்மா சரி, அப்பா..?''

''அவர் பேசற மனநிலையில் இல்லை. சுத்தி இருக்கிறவங்க கன்ட்ரோல்லதான் அவர் இருக்கார். 'இப்படிப் பண்ணிட்டா... அப்படி அசிங்கம் பண்ணினா’னு ஏத்திவிட்டுட்டு இருக்குறாங்க. என்கிட்ட பேசணும்னு அவரே நினைச்சாலும் அவரால் பேச முடியாது. ஃபங்ஷன்களில் போட்டோவுக்கு போஸ் கொடுக் கும்போது ஒண்ணா நின்னுக்குறாங்களே தவிர, உள்ளுக்குள் ஒற்றுமை இல்லை!''

''அதிரடிப் பேட்டிகள், விமான நிலையத்தில் விடாப்பிடி பிடிவாதம், இதெல்லாம் ஓவர் இல்லையா?''

''நான் அண்ணா ஹஜாரே மாதிரி சமூகப் போராளி கிடையாது. 'பெத்த பிள்ளையவே தாயை வெறுக்குற அளவுக்குப் பண்ணிட்டாங்களே’ங்கிற கோவத்துலதான், கொஞ்சம் அதிகப்படியாப் பேசிட்டேன். அது சரி, தவறுன்னு சொல்ல மாட்டேன். ஆனால், 'எனக்குத் தெரிந்த விஷயங்களை வெளியே சொல்வேன்’ என்பதுதான் எனக்கு அப்போது இருந்த ஒரே ஒரு ஆயுதம்!''

'' 'நான் இருப்பதுதான் விஜய்ஹரிக்குப் பிரச்னை என்றால், வனிதாவைப் பிரியக்கூடத் தயாராக இருக்கிறேன்’ என்றாரே உங்கள் கணவர்?''

''சொன்னது மட்டும் இல்லை... இதைப்பற்றி என்னுடன் விவாதிக்கவும் செய்தார். அவர் அமெரிக்காவில் பெரிய பெரிய ஐ.டி. நிறுவனங்களில் சி.இ.ஓ-வாக இருந்தவர். ஆனால், இந்த 7 மாதங்களில் நடந்த பிரச்னைகளால் அவருக்கு வேலை தரவே பல நிறுவனங்கள் பயப்படுகின்றன. பாவம்ல்ல அவரு!''

அடிமையாக இருக்கிறார் அம்மா!

''போகும் இடங்களுக்கு எல்லாம் மீடியா வைத் துணைக்கு அழைத்துச் செல்வது பரபரப்பு ஆக்கத்தானே?''

''தும்மினேன், இருமினேன் என்று எப்போதாவது பேட்டி கொடுத்திருக்கிறேனா? எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் மீடியாவின் பலம்தான். 'ஏம்மா, உங்க பையன் உங்ககிட்ட இருக்கணும்னு தீர்ப்பு கொடுத்துட்டோமே’னு கோர்ட்ல சொல்றாங்க. போலீஸ்ல கேட்டா, 'உங்ககூட வர விருப்பம் இல்லாத பையனை நாங்க என்னம்மா செய்றது?’னு சொல்றாங்க. இந்த ரெண்டும்கெட்டான் நிலையில் எனக்கு ஒரே துணை மீடியா மட்டுமே. இதுல என்ன சார் தப்பு இருக்கு?''