Published:Updated:

ஐ மிஸ் யூ... தமிழ்ல சொல்லுங்க?

சமஸ், கவின் மலர்

##~##

''பயங்கரமான கேள்விகளா இருக்கும் போல இருக்கே... கேளுங்க...கேளுங்க!'' என்று உற்சாகமானார் சாரு நிவேதிதா.

''ஐயோ! இருக்குற கலாட்டா பத்தாதா? நீங்களுமா?'' என்று சிணுங்கினாலும், சிரித்துக்கொண்டே பதில் அளித்தார் ரஞ்சிதா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஒரு முடிவோடு இருக்கீங்க. தப்பிக்க முடியுமா... ஆரம்பிங்க!'' என்றவாறே கேள்விகளை எதிர் கொண்டார் சீமான்.

''ரிஸ்க்ல மாட்டிவிட்றாதீங்க மக்களே!'' என்று பயபக்தியுடன் பரீட்சைக்குக் கேள்வித் தாளைப் புரட்டுவதுபோல பவ்யம் காட்டினார் மகேஸ்வரி.

''நான் கொஞ்ச நாளா டி.வி. பார்க்கிறது இல்லை... பேப்பர் படிக்கிறது இல்லை... இப்பப் பார்த்துக் கேக்குறீங்களே? வசமா மாட்டிக்கிட்டேன். சரி... கேளுங்க!'' - தயாரானார் கார்த்திகா.

கலாட்டா ஸ்பெஷலுக்கு 'ஜெனரல் நாலெட்ஜ்’ கேள்விகள் கேட்டுக் கலாய்க்கலாம் என்று பிளான்...

ஐ மிஸ் யூ... தமிழ்ல சொல்லுங்க?

புதிதாக உதயமான தெற்கு சூடான், உலகின் எத்தனையாவது நாடு?

சரியான பதில்: 193

சாருநிவேதிதா: ''கொஞ்சம் இருங்க.... மன்மோகன் சிங்கைக் கேட்டுச் சொல்றேன்!''

ரஞ்சிதா: ''சத்தியமாத் தெரியாது!''

சீமான்: ''உலகின் 193-வது நாடு தெற்கு சூடான். இந்த சுதந்திரத்தை நாங்கள் வர வேற்கிறோம். உலகின் 194-வது நாடு தமிழீழம். அதை வரவேற்கத் தயாராக இருங்கள்!''

மகேஸ்வரி: ''சூப்பர்ங்க... உலகத்துல கடைசியா உதிச்ச நாட்டுக்கு என்ன நம்பரோ, அந்த நம்பர். எப்பூடி?''

கார்த்திகா: ''நான் சொன்னேன்ல... எதையும் ஃபாலோ பண்ணவே இல்லை கொஞ்ச நாளான்னு!''

என்கவுன்ட்டரின்போது ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்த நகரத்தின் பெயர் என்ன?

சரியான பதில்: அபோதாபாத்

சாரு நிவேதிதா: ''அல்லைப்பிட்டி. நான் ஜியாக்ரஃபில கொஞ்சம் வீக்!''

ரஞ்சிதா: ''பாகிஸ்தான்ல ஏதோ ஒரு ஆர்மி கேம்ப்புக்குப் பக்கத்துல உள்ள இடம். ம்... பாஸ்!''

சீமான்: ''என்ன நகரம்... தெரியலையே?''

மகேஸ்வரி: ''அவரு பாகிஸ்தான்லயா தங்கி இருந்தார்? அதுவே எனக்குத் தெரியாது. நீங்க சிட்டி வேற கேக் குறீங்க... சான்ஸே இல்ல!''

கார்த்திகா: ''ரொம்பக் கஷ்டம்... மறந்துட்டேன்!''

ஐ மிஸ் யூ... தமிழ்ல சொல்லுங்க?

 தே.மு.தி.க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை?

சரியான பதில்: 29

சாரு நிவேதிதா: ''விஜயகாந்த்கிட்ட ஃப்ரெண்ட் ஆகலாம்னு நினைச்சுட்டு இருக்கேன். எனக்கு அடி வாங்கிக் குடுத்துருவீங்கபோல இருக்கே!''

ரஞ்சிதா: ''தே.மு.தி.க-வா அப்டின்னா? ஓ... விஜயகாந்த் கட்சில்ல... 25 இருக்குமா?''

சீமான்: ''29.''

மகேஸ்வரி: ''அதுக்கு முன்னாடி நீங்க என்கிட்ட அ.தி.மு.க. எத்தனை இடம் வாங்குச்சுனு கேட்டு, அதுக்கு நான் கரெக்டா பதில் சொல்லி இருந்தா, இந்தக் கேள்வி கேக்குறதுல ஒரு நியா யம் இருக்கு. எனக்கு அதுவே சரியா தெரியாது!''

கார்த்திகா: ''தே.மு.தி.க-ன்னா..? ஓ... விஜய்காந்த் பார்ட்டியா? அவரை எனக்கு சினிமாவில் சூப்பர் சீனிய ராகத்தான் தெரியும். பொலிடீஷியனா அவரைப்பத்தி அவ்வளவாத் தெரியாதுங்க!''

எலிசபெத் டெய்லரின் மகள் பெயர் என்ன?

சரியான விடை: லிஸா டாட்

சாரு நிவேதிதா: ''என் கேர்ள் ஃப்ரெண்ட் பேரே எனக்கு நினைவிருக்காது. டார்ச்சர் பண்ணாதீங்க!''

ரஞ்சிதா: ''ஏதாவது ஒரு டெய்லரா இருப்பார்!''

சீமான்: ''நான் என்ன ஐ.ஏ.எஸ். பரீட்சைக்கா தயாராகிட்டு இருக்கேன்? வெறும் பொது அறிவுக் கேள்வியா கேக்குறீங்க? தெரியலை!''

மகேஸ்வரி: ''ரீசன்ட்டா அவங்களுக்குக் கல்யா ணம் நடந்துச்சுல்ல... பிரின்ஸ் சார்லஸைக்கூட... ஐயையோ, நான் சொல்றது எலிசபெத் மகாராணிபோல இருக்கே. இது சத்தியமாத் தெரியலீங்க!''

கார்த்திகா: ''ஜூனியர் டெய்லர்!''

ஐ மிஸ் யூ... தமிழ்ல சொல்லுங்க?

'ஐ மிஸ் யூ’-வுக்குச் சரியான தமிழ்ப் பதம் என்ன?

சரியான பதில்: 'மனம் உன்னைத் தேடுகிறது’ என்பது ஓரளவுக்கு நெருங்கி வரும் அர்த்தம். ஆனால், தமிழில் மிகச் சரியான பொருள் கிடையாது.

சாரு நிவேதிதா: ''ஐ லவ் யூ சொல்றதுக்கே தமிழ்ல முடியாது. இதுல ஐ மிஸ் யூ-வுக்கு எங்க போறது?''

ரஞ்சிதா: ''ம்... உங்களை மிஸ் பண்றேன். சுத்த தமிழ்ல என்ன? தெரியலையே.. அஞ்சுலயும் அவுட்டா... போச்சு!''

சீமான்: ''ம்... உங்களுடன் இருக்கும் நேரத்தை இழக்கிறேன். உங்களுடன் இருக்கும் பொன்னான நேரம்... இல்லை வாய்ப்பை இழக்கிறேன்னு போட்டுக்குங்க. சரியா?''

மகேஸ்வரி: ''நிச்சயமா 'உன்னைக் காணவில்லை’ கிடையாது. வேற என்ன...   'உன்னைத் தொலைத்து விட்டேன்’... ம்ஹூம்... இது ரொம்பத் தப்பு. தெரியலீங்க.  தமிழ்ல  சொல்லவே முடியாதோ?''

கார்த்திகா: ''நான் உன்னை ரொம்ப... ரொம்ப... மிஸ் பண்றேன். என்னங்க... இதுவும் இங்கிலீஷ்லதான் வருது. 'மிஸ்’ஸை 'மிஸ்’ பண்ணிட்டு இதைச் சொல்லவே முடியாதா?''