வெளியிடப்பட்ட நேரம்: 22:21 (14/04/2017)

கடைசி தொடர்பு:22:20 (14/04/2017)

கீர்த்தி சுரேஷை பார்க்க கூடிய ரசிகர்கள் - போக்குவரத்து ஸ்தம்பிப்பு

சேலம் மாவட்டத்தில் நகைக்கடைத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளூ ஏற்பட்டது. 


சேலம் மாவட்டம் ஐந்து சாலை பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் வருகை தந்தார். கடைக்கு வெளியே சாலையில் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று கீர்த்தி சுரேஷ் ரசிகர்களிடம் பேசினார். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ஆடியும் காட்டினார். அவரைக் காண காலை முதலே ஏராளமான ரசிகர்கள் கூடினர்.

அவர்கள் தடுப்புகளுக்கு வெளியே நிற்காமல் சாலையின் மத்தியிலும் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்கள் ஒழுங்குப்படுத்த காவல்துறையினர் முயற்சி செய்ததால் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக புதிய பேருந்து நிலையம் முதல் ஐந்து சாலை வரையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.