Published:Updated:

ஸ்ரீபத்மநாபா கோயில் உங்களை வரவேற்கிறது!

எஸ்.ஷக்திபடங்கள் : தி.விஜய்

ஸ்ரீபத்மநாபா கோயில் உங்களை வரவேற்கிறது!

எஸ்.ஷக்திபடங்கள் : தி.விஜய்

Published:Updated:
##~##

திருவனந்தபுரத்தின் அனைத்துச் சாலைகளும் பத்மநாப சாமி ஆலயத்தை நோக்கியே! பல பில்லியன் மதிப்பில் பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு நாளும் புதிய பரபரப்புடன் விடிந்து, அடுத்த புதிரை எதிர்நோக்கியபடி அடங்குகிறது திருவனந்தபுரம்.  

பரபர போக்குவரத்து, கடுகடு நெரிசல் போன்ற மாநிலத் தலைநகரங்களுக்கே உரித்தான அடையாளங்களை அண்டவிடாத அமைதியான ஊர் திருவனந்தபுரம். ஆனால், கடந்த சில வாரங்களாக நிலைமை தலைகீழ்! கேமரா பேக்கைப் பார்த்தாலே சரேலென்று வந்து நிற்கும் ஆட்டோ டிரைவர்கள் 'அம்பலத்துக்கானோ! இரிபது ரூபா மாத்ரம்’ என்று ஏறக்குறைய ஆட்டோ வில் திணித்துக் கொண்டுபோய் இறக்கு கிறார்கள். பொக்கிஷக் கடவுளைத் தரிசிக்கக் காத்திருப்பவர்கள் தூவும் பொரியைத் தின்று கடந்த சில வாரங் களில் மட்டும் கன்னாபின்னா எனக் கொழுத்திருக்கின்றன கோயில் குளத்து மீன்கள். பிரதான வாயிலான 'கிழக்கு நடை’யின் முன்புறமாக எப்போதும் ஏதோ ஒரு சேனலின் கேமரா ஆலய நிகழ்வுகளை விழுங்கிக்கொண்டே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீபத்மநாபா கோயில் உங்களை வரவேற்கிறது!

இந்தக் கோயிலுக்குள் ஆண்கள்  மேல்சட்டை இல்லாமல் வேட்டியுடன் மட்டுமே நுழைய முடியும். பெண்களுக்குச் சேலை. மற்ற உடைகளில் வரும் பெண்கள் வேட்டியை மேலும் கீழும் சுற்றித்தான் கோயிலுக்குள் செல்ல முடியும். இதற்காகவே வேட்டிகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. இப் போது ஏராளமான வேட்டிகள் இறக்குமதி ஆகியிருக்கின்றன.

மெஷின் கன்களோடு பாரா மிலிட்டரி போலீஸைக் கடந்து கிழக்கு வாயிலின் முன்புறம் உள்ள 'மெட்டல் டிடெக்டர்’ மெஷின் வழியே நுழைந்தால், சின்ன 'கீச்’ சத்தத்துக்குப் பிறகு அனுமதி கிடைக்கிறது.  பிரமாண்டமான கதவுகள், 'பளிச்’ சுவர்களைக் கடந்து சென்றால், அபார காற்றோட்டத்துடன் வரவேற்கிறது பிரதானப் பிராகாரம். இதன் இடது புறமாகச் சென்று, கம்பி வேலியில் நுழைந்து, வரிசையில் நின்று அடிமேல் அடி வைத்து நடந்தால் வெண்ணெய் பூசிய அனுமன் வரவேற் கிறார். கொஞ்சம் நின்று கொடிமர அமைப்பை ரசித்தால், 'யேய், போய்க்கோ, போய்க்கோ!’ என்று துரத்துகிறார்கள் ஆலயப் பணியாளர்கள். பொதுவாக, இந்த இடத்தை அடைந்துவிட்டால் 'இன்னும் சில நிமிடங்களில் சயனத்தில் இருக்கும் பத்மநாப சாமியைத் தரிசித்துவிடலாம்!’ என்று பக்திப் பரவசத்தோடு மெல்லிய படபடப்பும் சேர்ந்துகொள்ளும். இப்போதோ படபடப்பு அதிகரித்து பிரமிப்பும் சேர்ந்துகொள்கிறது. காரணம், இந்தப் பகுதியில்தான் பொக்கிஷங்கள் நிரம்பிய பாதாள அறைகள் இருக்கின்றன. சிறுபிள்ளைத்தனம் என்று தெரிந்தும்கூட ஒவ்வொருவர் கால்களும் நின்று நிதானித்து, ஏதோ ஓர் எதிர்பார்ப்போடு தரையைத் தட்டித் தட்டி நடக்கின்றன. கைகளோ கல் சிற்பங்களின் தலையையும், இடுப்பையும் திருப்ப முனைகின்றன. கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்கின்றன. எல்லாவற்றையும் மர்மச் சிரிப்புடன் ரசிக்கும் போலீஸ் டீம்  பத்மநாப சாமியை நோக்கி பக்தர்களை நெம்பி நகர்த்துகிறது.

ஸ்ரீபத்மநாபா கோயில் உங்களை வரவேற்கிறது!

பொக்கிஷம் பற்றி கோயில் பணியாளர்கள் யாரிடம் விசாரித்தாலும் எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார்கள். ஆனாலும், சைஸாகப் பேசி விசாரித்த வரையில் பாதாள அறைகளில் கிடைத்த நகைகள் குறித்து மீடியாவில் இதுவரையில் வெளியே வந்த தகவல்கள் எல்லாம் சொற்பம்தானாம். அனந்த பத்மநாபருக்காகச் செய்யப்பட்ட சிம்மாசனம் போன்ற மினி தங்க நாற்காலி பற்றியும், தங்க வாள்கள் பற்றியும் இதுவரை வெளிவராத தகவல்கள் உள்ளன என்று கிசுகிசுக்கிறார்கள். கோர்ட்டின் அனுமதி வேண்டி திறக்காமல் வைக்கப்பட்டு இருக்கும் இறுதி அறை மட்டும் திறக்கப்பட்டால் ஆச்சர்யத்தின் அடர்த்தி இன்னும் அதிகரிக்கும். மற்ற அறைகளை விடப் படு வலுவான பாறாங்கற்களால் இதன் வாயிலின் உட்புறம் மூடப்பட்டு இருக்கும் என்கிறார்கள்.

ஆலயத்தின் வாயில் மற்றும் வெளிப்புறத்தில் சீருடை போலீஸார் பாதுகாக்க, கோயிலின் உள்ளே சட்டை அணியக் கூடாது என்பதால், இங்கே காவலுக்கு இருக்கும் போலீஸுக்கு ஸ்பெஷல் யூனிஃபார்ம் தயாராகி இருக்கிறது. வேட்டி, சட்டைக்குப் பதிலாக அடர் நீல நிற நேரியல் போல் தயாரித்து உடலை மூடி பின் செய்திருக்கிறார்கள். வலது தோள்பட்டை ஓரமாக 'POLICE’ என்று எம்ப்ராய்டரி. துப்பாக்கி, வாக்கிடாக்கி போன்ற  சாதனங்களுடன் ஒவ்வொரு மூலையிலும் நின்று ஹெட்போனில் 'ஓவர்... ஓவர்’ தகவல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கையில் துண்டுச் சீட்டு, பேனாவுடன் யாராவது குறிப்புஎடுப்பது, மேப் போடுவது தெரிந்தால், தனியே தள்ளிக்கொண்டுபோய் விசாரணை தான்!

ஸ்ரீபத்மநாபா கோயில் உங்களை வரவேற்கிறது!

ஆலயத்துக்குள் வரும் ஒவ்வொருவரும் அவர்களை அறியா மலே 'இன்விசிபிள் ஸ்கேனிங்’ குக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றொரு தகவலும் உலா வருகிறது. பக்தர்கள், பார்வையாளர்களின் வருகை போலீஸால் கண்காணிக்கப்படுவதுபோல, ஆலயத்தின் மொத்த நிகழ்வுகளும் மன்னர் குடும்பத்தின் கவனத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறது. தினமும் கோயிலுக்கு வந்து சேவையாற்றும் கடமையை மன்னர் குடும்பம் சத்தம் இல்லாமல் செய்து வருகிறதாம்.

பிராகார வெளிகள் எங்கும் பொக்கிஷம்பற்றிய பேச்சுதான். பிரமிப்புக்கு நிகராக பயமும் அவர்களைப் பீடித்து இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், இந்த பொக்கிஷ அறைகள் திறக்கப்படுவதற்குக்

ஸ்ரீபத்மநாபா கோயில் உங்களை வரவேற்கிறது!

காரணமான சுந்தர்ராஜன் சமீபத்தில் இறந்துபோனதுதான். 'தெய்வநிந்தனை செய்தோர்க்கு மரணமே பதில்’ என்று உஷார் தகவல் சொல்கிறார்கள் பாதாள அறை திறப்புக்கு எதிரானவர்கள்.

இந்தக் கோயிலில் பொதுவாகவே தமிழர்களின் வருகை அதிகம் இருக்கும். அதிலும் பொக்கிஷப் பரபரப்புக்குப் பின் கேட்கவே வேணாம். திருநெல்வேலி பக்கம் இருந்து பைக்கை எடுத்துக்கொண்டு வரும் இளவட்டங்கள் ஆலயத்தை அடிமேல் அடியெடுத்து வைத்து ஆராய்கிறார்கள். 'ஏம்டே! இம்புட்டு வருஷமா தங்கம் எப்படிடே கசடு ஏறாம இருக்குது? ஏதாச்சும் கெமிக்கல் கலந்துவெச்சிருப்பானுவளோ?!’ என்று ஆச்சர்யம் பரிமாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தப் பரபரப்புகள் அனைத்தையும் கண்டும் காணாமலும் கண்மூடி அமைதித் துயிலில் இருக்கிறார் அனந்தபத்மநாபர்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism