Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறது டைம் பத்திரிகை. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசேஞ்சை முந்தி அட்டைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் மார்க்தான், உலகிலேயே மிக இளம் வயதில் டைம் அட்டைப் படத்தில் இடம் பெற்றிருப்பவர். 'உலகம் முழுவதும் மக்கள் தொடர்பில் இருப்பதற்கான தகவல் தொடர்பு வழிமுறையையே மாற்றிக்காட்டிய 26 வயது இளைஞர்’ என்பது பத்திரிகையின் புகழாரம். ஃபேஸ்புக்ல 'லைக்’ போடுங்கப்பா!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 டீன்-ஏஜ், காலேஜ் இளசுகள்தான் ஃபேஸ்புக் 'படிப்பார்கள்’ என்பதை உடைத்திருக்கிறார் 103 வயதான லண்டன் பாட்டி லில்லியன் லோ. உலகின் மிகவும் வயதான ஃபேஸ்புக் உறுப்பினர் இந்தப் பாட்டிதான். ''ஏழு பேரக் குழந்தைகள், 13 கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்க இது உதவுகிறது!'' என்று சிரிக்கிறார் லில்லியன். செம கில்லிப் பாட்டி!

இன்பாக்ஸ்

 கன்னடத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் சிவராஜ்குமாரின் 100-வது படமான 'ஜோகையா’வின் ஆரம்பக் காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம் ரஜினி. சிவராஜ்குமார் பற்றியும் அவரது குடும்பம்பற்றியும் ஐந்து நிமிடங்கள் ரஜினி பேசியிருக்கிறாராம். ராஜ்குமாரே நேரில் வந்து பேசுவதுபோல் அமைந்திருக்கிறது என்று உணர்ச்சிவசப்படுகிறது ஜோகையா டீம். தலைவருக்கு அடுத்த படம் எப்போ?

இன்பாக்ஸ்

 பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை அனுமதித்த நீதிமன்ற உத்தரவிலேயே உற்சாகமான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மேலும் ஒரு சர்க்கரைச் செய்தி. 'டைட்டானிக்’ ஹீரோ லியானார்டோ டி காப்ரியே£ மற்றும் சூப்பர் மாடல் நவோமி கேம்பலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் ப்ரீத்தி. ஆனால், இது ஹாலிவுட் சினிமா அல்ல... புலிகள் பாதுகாப்புக்கான விழிப்பு உணர்வு மினிமா. பாதுகாக்கப்பட வேண்டியவை 'புலி’கள்!

இன்பாக்ஸ்

 மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்தும், இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகும், திருமணம் முடிக்காமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்த ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் தம்பதி, ஒருவழியாகத் திருமணத்துக்குத் தேதி குறித்துவிட்டார்கள். இவர்களின் திருமண நிகழ்ச்சி அரங்கேறவிருப்பது, இந்தியாவின் ஜோத்பூர் நகரம். ஏஞ்சலினா ஜோலியின் யோகா குரு ஷியாம் தலைமையில் டும்டும்டும். 'ஃபர்ஸ்ட் நைட்’லாம் இருக்காதுல்ல!

 உலகின் நம்பர் ஒன் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான 'ஹீரோ ஹோண்டா’ கூட்டணி பிரிந்துவிட்டது. 26 வருடங்களாக இணைந்து மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்து வந்த இந்த இந்திய (ஹீரோ) - ஜப்பான் (ஹோண்டா) கூட்டு நிறுவனத்தில் இருந்து ஹோண்டா பிரிந்துவிட்டது. தனது 26 சதவிகிதப் பங்குகளை

இன்பாக்ஸ்

8,700 கோடிக்கு ஹீரோவிடமே விற்பனை செய்துவிட்டது ஹோண்டா. தனிக்காட்டு 'ஹீரோ’?!

இன்பாக்ஸ்

 இந்த ஆண்டு நாஞ்சில்நாடனுக்கு வழங்கப்பட்டதன் மூலம் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டுள்ளது சாகித்ய அகாடமி விருது. 'சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதைத் தொகுப்புக்குத்தான் இந்த விருது. 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள் என தமிழின் முக்கியமான எழுத்தாளராகத் தடம்பதித்துள்ள நாஞ்சில்நாடனின் சொந்தப் பெயர் சுப்பிரமணியன். நாகர்கோவில் அருகில் உள்ள வீரநாராயணமங்கலத்தில் பிறந்து, நாஞ்சில் நாட்டு வழக்கை எழுத்துக்குள் கொண்டுவந்து நாஞ்சில்நாடன் ஆனார். இவரது 'தலைகீழ் விகிதங்கள்’ தங்கர்பச்சானால் 'சொல்ல மறந்த கதை’ என்று சினிமா ஆகியிருக்கிறது என்றால், இளையராஜா இசையில் 'படித்துறை’ என்னும் படத்தில் பாடலும் எழுதியிருக்கிறார் நாஞ்சில்நாடன். எட்டுத் திக்கும் எழுத்து யானை!

இன்பாக்ஸ்

 '3 இடியட்ஸ்’ தமிழ் ரீ-மேக்கில் சூர்யா நடிப்பது உறுதி. முதலில் விஜய் நடிப்பதாக இருந்து, பிறகு சூர்யா நடித்த 'அயன்’, 'சிங்கம்’ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற சென்ட்டிமென்ட்டில் '3 இடியட்ஸு’ம் ஹிட்தான் என்று இப்போதே குஷியில் இருக்கிறது சூர்யா தரப்பு. தெலுங்கு பதிப்பிலும் மகேஷ் பாபுவுக்குப் பதில் சூர்யாவேதான் இடியட். க்யூட் இடியட்!

 இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா’ பட வேலைகளுக்கு நடுவில் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் காதல் கிளாஸிக் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் கௌதம் மேனன். இசை ஹாரிஸ் ஜெயராஜ். பிரிந்தவர்கள் இணையும் காலம்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 மாசிலாமணி - தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த பதிப்பாளர். பல முக்கியமான நூல்களைப் பதிப்பித்த கலைஞன் பதிப்பகத்தின் உரிமையாளர் மாசிலாமணியைக் காலம் பறித்துக்கொண்டது, இந்த டிசம்பர் 19-ல். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், ஜெயகாந்தன் போன்ற முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுப்புகளாகக் கொண்டுவந்தவர், 55 வருடம் பதிப்புத் துறையில் உழைத்தவர், எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற பல எழுத்தாளர்களின் முதல் புத்தகத்தை வெளியிட்டவர், சுதேசமித்திரன், சரஸ்வதி, கணையாழி, தீபம் போன்ற பழைய இதழ்களைத் தொகுத்து புத்தகங்களாகக் கொண்டுவந்தவர் என மாசிலாமணிக்கு நிறையப் பெருமைகள் உண்டு. 80 வயதில் அடியெடுத்துவைத்த அவர் பிறந்த நாளை பிப்ரவரியில் விழாவாகக் கொண்டாடலாம் என்று குடும்பத்தார் ஏற்பாடுகளைத் தொடங்க, தூக்கத்திலேயே அவர் நீங்காத ஓய்வெடுத்துக்கொண்டார். கடைசிப் பதிப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism