விஜய் டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார், கமல்ஹாசன்..!

விரைவில் ஆரம்பிக்க உள்ள விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ஒன்றை, கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் எனக் கூறப்படுகிறது.

kamal

சத்யராஜ், சூர்யா, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி எனப் பிரபலங்களைத் தொகுத்து வழங்கவைத்து, சில முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்துவது விஜய் டிவியின் ஸ்டைல். அந்த வரிசையில், விஜய் டிவி-யின் புதிய நிகழ்ச்சி ஒன்றை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இந்தப் புதிய நிகழ்ச்சி, ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’யின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போல இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!