சிலம்பத்தில் கலக்கும் சமந்தா! வைரல் வீடியோ | Samantha plays traditional martial art, Silambam

வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (20/04/2017)

கடைசி தொடர்பு:14:23 (20/04/2017)

சிலம்பத்தில் கலக்கும் சமந்தா! வைரல் வீடியோ

நடிகை சமந்தா, சிலம்பாட்டம் ஆடும் வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஒரு மில்லியன் லைக்குகளையும் தாண்டி ஹிட் அடித்துவருகிறது இந்த வீடியோ.

சமந்தா

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர், நடிகை சமந்தா. புதுப்புது விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவது சமந்தாவின் வழக்கம். தற்போது, சிலம்பத்தில் கால் பதித்துள்ளார்.

பாரம்பர்ய தற்காப்புக் கலையான சிலம்பத்தில், சமந்தா ஈடுபட்டுவருகிறார். தனக்கு சவால்கள் பிடிக்கும் என்பதால், சிலம்பத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். 'இந்தப் புதிய விளையாட்டுப் பயிற்சியில், எப்போது முழுதாகத் தேறுவேனோ' என்றும் நடிகை சமந்தா தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பளு தூக்குதலில் ஈடுபட்டு 100 கிலோ எடையைத் தூக்கிய வீடியோ, சில நாள்களுக்கு முன்னர் சமந்தாவால் வெளியிடப்பட்டது.