கன்னட அமைப்புகளுக்கு ராஜமெளலி வேண்டுகோள்! | Rajamouli's appeal to kannada friends

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (20/04/2017)

கடைசி தொடர்பு:17:25 (20/04/2017)

கன்னட அமைப்புகளுக்கு ராஜமெளலி வேண்டுகோள்!

பாகுபலி-2 திரைப்படத்துக்கு கர்நாடகாவில் தடை அறிவிக்கப்பட்டதால் அத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி கன்னட அமைப்புக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

பாகுபலி 2

ராஜமெளலி இயக்கத்தில் இந்தியாவின் பிரமாண்டத் திரைப்படமாக வெளியான படம் பாகுபலி. தற்போது பாகுபலியின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்த நிலையில் கர்நாடகாவில் பாகுபலி-2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னடர்களை பல சமயங்களில் சத்யராஜ் தரக்குறைவாக பேசியதால், முதன்மையான கதாபாத்திரமாக வரும் சத்யராஜ் நடித்த திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிடவிட மாட்டோம் என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

தற்போது, கன்னட நண்பர்களுக்காக பாகுபலி திரைப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் ராஜமெளலி, ‘பாகுபலி-2 வெளியாகவில்லை என்றால் சத்யராஜுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சத்யராஜ் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்காக ஒரு திரைப்படத்துக்கு தடை விதிப்பது இத்திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட பலரையும் பாதிக்கும். சத்யராஜ் கருத்துக்கும் எங்களுக்கும், இத்திரைப்படத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்னைக் குறித்து சத்யராஜிடம் தகவல் தெரிவித்துவிட்டதாகவும் இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை எனவும் கூறிய ராஜமெளலி தங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.