உயர்நீதிமன்றத்தில் வடிவேலுவுடன் செல்பி எடுத்த வழக்கறிஞர்கள் | Vadivelu and Singamuthu appeared in Chennai HC

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (20/04/2017)

கடைசி தொடர்பு:17:11 (20/04/2017)

உயர்நீதிமன்றத்தில் வடிவேலுவுடன் செல்பி எடுத்த வழக்கறிஞர்கள்

நிலமோசடி தொடர்பான வழக்கில் காமெடி நடிகர்கள் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.


தாம்பரத்தை அடுத்த படப்பையில் தனக்குச் சொந்தமாக உள்ள 3 ஏக்கர் 52 சென்ட் கொண்ட நிலத்தை சிங்கமுத்து ஏமாற்றி வாங்கிவிட்டார் என்று நடிகர் வடிவேலு சென்னை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகியோர் ஏப்ரல் 7-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற விசாரைணயின் போது, இருவரும் ஆஜராவில்லை. அதனையடுத்து 20-ம் தேதி இருவரும் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகியோர் நேரில் ஆஜராகினர். நீதிமன்றம் வந்த வடிவேலுவுடன் ஏராளமான வழக்கறிஞர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.