ராதாமோகன் இயக்கத்தில் 'பிருந்தாவனம்' டீசர்

ராதாமோகன் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும், ‘பிருந்தாவனம்’ படத்தின்  டீசர் வெளியாகியுள்ளது.

மொழி, அபியும் நானும், பயணம் உள்ளிட்ட பல தரமான படங்களை இயக்கியவர் ராதாமோகன். இவர் அருள்நிதி, விவேக், தன்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 'பிருந்தாவனம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். நடிகருக்கும், ரசிகனுக்கும் இடையேயான அழகான நட்பும், அன்பும்தான் 'பிருந்தாவனம்' .

விவேக் நடிகராகவும், அருள்நிதி ரசிகராகவும் நடித்துள்ளனர். படத்தில் காதுகேட்காத - வாய்பேச முடியாத கேரக்டர் அருள்நிதிக்கு. காமெடியிலும், சென்டிமென்டிலும் ‘மொழி’ படத்தை இந்த டீசர் நினைவுப்படுத்துகிறது.  ‘ஜில்ஜங்ஜக்’ இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஆகஸ்டில் படம் ரிலீஸ் ஆகிறது.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!