வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (22/04/2017)

கடைசி தொடர்பு:13:51 (22/04/2017)

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' சரஸ்வதி பூஜை விடுமுறையில் ரிலீஸ்!

சரஸ்வதி பூஜைக்கான விடுமுறை தினங்களின் போது சிவகார்த்திகேயனின் அடுத்தபடமான 'வேலைக்காரன்' வெளியாகும் என்று 24ஏ.எம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 


'ரெமோ' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத்பாசில், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அந்தப் படம் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏ.எம் ஸ்டூடியோஸ் தெரிவித்துள்ளது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்காக விடப்படும் தொடர் விடுமுறைகளை கணக்கில் கொண்டு படம் வெளியிடப்படுகிறது. அந்தப் படத்திற்கான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.