வெளியிடப்பட்ட நேரம்: 22:46 (22/04/2017)

கடைசி தொடர்பு:14:59 (01/08/2017)

போலந்து பல்கலைக்கழகத்தில் திரையிடப்படும் உறியடி!

கடந்தாண்டு வெளியாகி பாராட்டுக்களை குவித்த உறியடி திரைப்படம், போலந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் திரையிடப்படுகிறது.

uriyadi

அறிமுக இயக்குநர் விஜயகுமார் நடித்து இயக்கிய உறியடி திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. சாதி அரசியலை மையப்படுத்தி இப்படம் உருவானது. திரையரங்குகளில் பெரிய வெற்றியை பெறாத போது, விமர்சனங்களிலும் சமூக வலைதளங்களிலும் உறியடி வெற்றி பெற்றது.

இந்நிலையில் உறியடி திரைப்படம் போலந்தில் உள்ள பல்கலைகழகத்தில் திரையிடப்படுகிறது. போலந்தில் உள்ள ராக்லே பல்கலைக்கழகத்தில் திரைப்படங்களில் அரசியலின் பங்கு பற்றி விவாதிக்கும் கருத்தரங்கில் இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது. அதன்படி, வருகின்ற திங்கட்கிழமை, ராக்லே பல்கலைக்கழகத்தில் இப்படம் திரையிடப்படுகிறது.