2020-ல் வருகிறது அவதார் 2-ம் பாகம் | Avatar sequel to hit the screens by 2020

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (23/04/2017)

கடைசி தொடர்பு:17:49 (23/04/2017)

2020-ல் வருகிறது அவதார் 2-ம் பாகம்

அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2020-ல் வெளியாகவுள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

avatar

2009 ல் வெளியாகிய அவதார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகம் முழுவதிலும் உள்ள திரைப்பட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அவதார். 2 பில்லியன் டாலர் வசூல் சாதனையையும் இத்திரைப்படம் படைத்தது. இதையடுத்து அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும் என படக்குழுவின் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

 

 

இந்நிலையில் அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அவதார் படத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,'2020-ஆம் ஆன்டில் அவதார் இரண்டாம் பாகம் வெளிவரும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021-ல் மூன்றாம் பாகமும், 2024-ல் நான்காம் பாகமும், 2025-ல் ஐந்தாம் பாகமும் வெளிவர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.