வெளியானது ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ ட்ரெய்லர்!

ஜோதிகாவின் நடிப்பில் மே மாதம் திரைக்கு வர இருக்கும் ‘மகளிர் மட்டும்’ திரைப்பட ட்ரெய்லர், இன்று வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வத் தகவலை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜோதிகா

‘36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு, ஜோதிகாவின் நடிப்பில் வெளிவர இருக்கிறது, ‘மகளிர் மட்டும்’.  சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் பிரம்மா இயக்குகிறார். இன்று, சத்யம் திரையரங்கில் இசை வெளியீடு நடக்கும் நிலையில், சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லரை வெளியிட்டுப் பதிவுசெய்துள்ளார்.

ஜிப்ரானின் இசை பின்னணியில் ஒலிக்க, ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா, லிவிங்ஸ்டன், நாசர் எனப் பெரிய நட்சத்திரங்களின் அணிவகுப்பு, ட்ரெய்லரை அலங்கரித்துள்ளது.

 


Do you like the story?

Please Appreciate the Author by clapping!