வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (24/04/2017)

கடைசி தொடர்பு:17:59 (24/04/2017)

நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்... ’ஜெமினி’ கணேசன் யார்?

சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் பட்டம் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நடிகையர் திலகம் யார் என்று இப்போது இருக்கும் இளைய தலைமுறையினர் பலருக்கும் தெரிவதில்லை. சிவாஜி கணேசன் ஒன்பது கதாபாத்திரத்தில் நடித்த நவராத்திரி திரைப்படத்தில், கதாநாயகியாக நடித்த சாவித்திரிதான் நடிகையர் திலகம். அப்படிப்பட்ட நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கில் படமாகிறது.

துல்கர் சல்மான்

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார். வைஜெயந்தி ஃபில்ம்ஸ் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறது. தெலுங்கில் 'மகாநதி' எனவும் தமிழில் 'நடிகையர் திலகம்' எனவும் பெயர் வைத்துள்ளனர். சாவித்திரி பற்றிய படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரம் இல்லாமல் இருக்குமா. ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் மலையாள திரையுலகின் ஹிட் நாயகனான துல்கர் சல்மான்.

தமிழில் 'வாயை மூடி பேசவும்' மற்றும் 'ஓகே கண்மணி'  படங்களின் மூலமாக ஏற்கெனவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான துல்கர், 'ஓகே கண்மணி' படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷனான  'ஓகே பங்காரம்' படத்தின் மூலம் தெலுங்கிலும் கால்பதித்து விட்டார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். கூடிய சீக்கிரமே துல்கர் மற்றும் கீர்த்தி சுரேஷ் கூட்டணியை திரையில் பார்க்கலாம்.