வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (25/04/2017)

கடைசி தொடர்பு:18:49 (25/04/2017)

16 ஆண்டுகள் கழித்து விருது விழாவில் கலந்து கொண்ட அமீர் கான்

மும்பையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருடைய தந்தை தினாநத் மங்கேஷரின் 75-வது நினைவு தினைத்தை முன்னிட்டு, தினாநத் மங்கேஷர் விருது விழா நடந்தது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு அமீர் கான் கலந்து கொள்ளும் முதல் விருது விழா இது. 

aamir khan

'தங்கல்' இந்தப் படத்தின் பெயரைக் கேட்டாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அமீர் கானின் நடிப்பும் அந்த படத்துக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பும்தான். இந்த அர்ப்பணிப்புக்காவே தினாநத் மங்கேஷர் விருது விழாவில் அவருக்கு 'விசேஷ் புரஸ்கார்' விருது வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்த விருதை அமீர் கானுக்கு வழங்கினார். 16 ஆண்டுகளாகவே எந்த விருது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்த அமீர் கான், இந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக 'லகான்' திரைப்படம், ஆஸ்கருக்கு 'ஃபெஸ்ட் ஃபாரின்' திரைப்படம் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருந்தது. அதற்காக ஆஸ்கர் விருது விழாவில் அவர் கலந்து கொண்டார்.  

விசேஷ் புரஸ்கார் விருதைப் பெற்ற பின்னர், இன்று இந்த இடத்தில் அவர் இருக்க காரணமான அனைத்து இயக்குநர் மற்றும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் 'கபில் தேவ்' மற்றும் நடிகை வைஜயந்தி மாலாவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

-சனா பிர்தோஸ்