கே.விஸ்வநாத்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!

'தாதா சாகேப் பால்கே' விருது பெற இருக்கும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

rajini

இந்தியத் திரையுலகின் உயரிய விருதாகக் கருதப்படுகிறது, 'தாதா சாகேப் பால்கே' விருது. 2016-ம் ஆண்டுக்கான இந்த விருதை,  இயக்குநர் கே.விஸ்வநாத் பெறுகிறார். அவருக்கு வயது 87. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தடம் பதித்தவர் விஸ்வநாத். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் உள்பட, பல வெற்றிப் படங்களை இயக்கியவர். 'யாரடி நீ மோகினி' போன்ற பல தமிழ்ப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கே.விஸ்வநாத்.

அவருக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிகிறது. இந்த நிலையில், கே.விஸ்வநாத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பால்கே விருது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், 'தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவத்துக்கு, மரியாதைக்குரிய எனது சல்யூட் கே.விஸ்வநாத் ஜி' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!