வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (26/04/2017)

கடைசி தொடர்பு:15:26 (26/04/2017)

தெலுங்கில் 'இது நம்ம ஆளு'

'வல்லவன்' திரைப்படத்தில் ஒண்ணா சேர்ந்து நடிச்சிருக்காங்க, சிம்புவும் நயன்தாராவும்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிச்சப்போ, இரண்டு பேருக்கும் காதல் வந்தது. ஆனால், படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள், வந்த காதல் போய்டுச்சு. திரும்பவும் இந்த ஜோடியை ஒண்ணா திரையில் பார்க்க முடியாதோன்னு நினைச்சப்ப, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'இது நம்ம ஆளு' படத்தின் மூலமா ரீ-என்ட்ரி கொடுத்தது இந்த ஜோடி.

simbu

தெலுங்கில் 'சரசுடு' படத்தின் மூலமா ரீஎன்ட்ரி கொடுக்குறாங்க. இந்த 'சரசுடு' படம், தமிழில் வெளிவந்த 'இது நம்ம ஆளு' படத்தின் டப்பிங் வெர்ஷன்தான். மே மாதம் இரண்டாம் தேதி இந்தப் படத்துக்கான ஆடியோவை ஹைதராபாத்தில் ரொம்பவே பிரமாண்டமா லாஞ்ச் பண்ணப்போறாங்களாம். ஏற்கெனவே, தெலுங்கு ரசிகர்களுக்கு வல்லவன் மூலமா அறிமுகம் ஆகி இருக்கார் சிம்பு. அப்போ, இந்த ஜோடியை கூடிய சீக்கிரம் தெலுங்குத் திரையிலும் பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க