சாய்னா நேவாலாக நடிக்கிறார் ஷ்ரதா கபூர்!

பத்மஶ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற உயரிய விருதுகளைப் பெற்றவர் சாய்னா நேவால். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பாலிவுட்டின் பிரபல  இயக்குநர் அமோல் குப்தா 2012-ம் ஆண்டு முதல்  முயற்சி செய்து வருகிறார். இப்போது அதற்கான நேரம்  வந்து விட்டது.

சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகப் போகிறது. இதில் சாய்னா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் நடிக்க உள்ளார். இவர் சாய்னாவின் நெருங்கிய தோழியும் ஆவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!