பாகுபலி குழுவுக்கு வந்த சோதனை!

2015-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பிரபாஸும், அனுஷ்காவும் இந்திய அளவில் பிரபலம் ஆகி விட்டனர்.  இந்த குழு பாகுபலி படத்தின் ப்ரொமோஷன் வேலை காரணமாக துபாய் சென்று விமானத்தில் திரும்புகையில் ஒரு மோசமான அனுபவத்தைச் சந்தித்து உள்ளனர் .

இது பற்றி, பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், தான் எமிரேட்ஸ் EK526 விமானம் மூலம் துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு பயணிக்க இருந்ததாகவும், துபாய் விமான நிலையத்தின் B4 கேட்டில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றிய விமான ஊழியர்களின் அணுகுமுறையும், சேவையும் முரட்டுத்தனமாக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் ஊழியர்களில் ஒருவர் இனவாத ரீதியாக நடந்தகொண்டதாக கருதுவதாகவும், எமிரேட்ஸ் விமானங்களில் தொடர்ந்து பயணிக்கும் தனக்கு இது மாதிரியான அனுபவம் புதிது என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு எமிரேட்ஸ் நிறுவனம், ஷோபுவின் புக்கிங் தகவல்களைத் தருமாறும், சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்றும் பதில் ட்வீட்டை பதிவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!