பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மரணம்!

1968-ம் ஆண்டு, 'மன் கா மீட்' படத்தின்மூலம்  பாலிவுட் திரை உலகில் அறிமுகம் ஆனவர், நடிகர் வினோத் கண்ணா (70). இவர் முன்னாள் பா.ஜ.க எம்.பி-யுமாவார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துமனையில் இன்று காலமானார். இவர் சில வாரங்களுக்கு முன்னர், கர்நாடகத்தில் உள்ள HN ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,  நீர்ச்சத்துக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

சமூக வலைதளங்களில், இவருக்கு சிறுநீரகப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படுவதாக வதந்திகள் வந்தன. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.  இவரின் மகன், ' நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக என் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் சீக்கிரம் வீடு திரும்புவார்' என்று தெரிவித்திருந்தார்.  இவர், மருத்துவமனையில் தன் குடும்பத்தாருடன் இருந்த புகைப்படமும்  வெளியிடப்பட்டது. ஆனால், இன்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் கடைசியாக, ஷாருக்கான் நடித்த 'தில்வாலே' படத்தில் நடித்திருந்தார். வினோத் கண்ணா மறைவுக்கு நடிகர் ரஜினி காந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!