வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (27/04/2017)

கடைசி தொடர்பு:17:46 (27/04/2017)

ஆர்யா வெளியிட்ட 'குரங்கு பொம்மை' படத்தின் டீசர்!

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் இயக்குநர் நித்திலன் இயக்கிய திரைப்படம் குரங்கு பொம்மை.  இதில் நடிகர் விதார்த், இயக்குநர் பாரதிராஜா, டெல்னா டேவிஸ், பி.எல் தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு போன்றோர் நடித்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா விதார்த்தின் தந்தையாக நடித்திருக்கிறார்.  இயக்குநர் நித்திலனின் குறும்படமான 'புதிர்' திரைப்படத்தின் தாக்கம்தான்  'குரங்கு பொம்மை' திரைப்படம். 

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள நடிகர் மம்முட்டி வெளியிட்டார். அனிமேஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் 'குரங்கு பொம்மை' படத்துக்கான டீசரை வெளியிட்டார்.  இந்த டீசர்க்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க