வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (28/04/2017)

கடைசி தொடர்பு:16:25 (28/04/2017)

தொண்டன் திரைப்படத்துக்கு 'யு' சான்றிதழ்

வித்தியாசமான திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக தரக்கூடியவர் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி. அவர் படைப்பில் வந்த 'அப்பா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

இந்த நிலையில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில் சமுத்திரக்கனி  இயக்கியுள்ள திரைப்படம் 'தொண்டன்'. இதில் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நடித்துள்ளார். இவருடன் இணைந்து விக்ராந்த், சூரி, தம்பி ராமையா, சுனைனா, கஞ்சா கருப்பு, ஞான சம்பந்தம் போன்றோர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தின் தலைப்பே படத்தை பற்றிய ஒரு குறியீடாக இருக்கும் நிலையில் சென்சார் போர்ட் இந்த படத்துக்கு 'யு' சான்றிதழ் தந்துள்ளது. மே மாதம் இந்தப் படத்தை திரையில் பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க