வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (28/04/2017)

கடைசி தொடர்பு:17:47 (28/04/2017)

சமந்தா சிலம்பம் சுற்றியதற்கான காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவின் பிஸியான கதாநாயகிகளில் முதல் வரிசையில் இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியான இவர் தமிழில் விஜய்யின் தளபதி 61 படத்திலும் , விஜய் சேதுபதியின் அநீதி கதைகள், விஷாலின் இரும்பு திரை படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

 

சில நாள்களுக்கு முன்பு சிலம்பம் சுற்றுவது தன்னுடைய ஹாபி என்று சொல்லி, அவர் சிலம்பம் சுற்றுவது போல் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். அப்போது அந்த வீடியோவும் செம வைரல். ஆனால் இன்று அதற்கான காரணம் வெளியாகியுள்ளாகியுள்ளது.

24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தா சிலம்பம் சுற்றியதற்கான காரணத்தை கூறியுள்ளது. 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சமந்தாவும், சிவகார்த்திகேயனும் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கப்போகும் பெயரிப்படாத படத்தில் நடிப்பதற்காகவே அவர் கடந்த 10 மாதங்களாகவே சிலம்பம் கற்று வந்தார் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், சமந்தாவின் இந்த சவாலுக்காக நன்றியும் தெரிவித்திருந்தது 24 ஏ.எம் ஸ்டூடியோஸ். இதற்கு, 'எனக்கு சவால் என்றால் ரொம்ப பிடிக்கும்' என்று ரீ -ட்விட் செய்து இருந்தார் சமந்தா. இந்த படத்துக்கான இசையை டி.இமான் இசைமைக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க