புதிய ரெகார்டை உருவாக்கிய பாகுபலி 2 முதல்நாள் கலெக்‌ஷன் | Collection of bahubali - 2

வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (29/04/2017)

கடைசி தொடர்பு:13:45 (29/04/2017)

புதிய ரெகார்டை உருவாக்கிய பாகுபலி 2 முதல்நாள் கலெக்‌ஷன்

பாகுபலியின் முதல்நாள் கலெக்‌ஷன் சுல்தான், டங்கல் படங்களை ஓரங்கட்டி முதலிடம் பிடித்தது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியானது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம். சில பிரச்னைகளைத் தாண்டி நேற்று வெளியான இந்தப் படத்தின் முதல் நாள் வசூல், மற்ற படங்களை ஓரங்கட்டி புதிய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது.

 

உலகம் முழுவதும் 9,000 திரையில் வெளியான பாகுபலி- 2  தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. இந்தியில் வெளியான பாகுபலி மட்டும் 55 கோடி முதல் நாளிலேயே வசூலானதாகச் சொல்லப்படுகிறது. அமீர்கானின் டங்கல், 29.50 கோடியும், சல்மான் கானின் சுல்தான் 36 கோடியும் முதல்நாள் வசூலைப் பெற்றிருந்தது. பாகுபலி முதல் பாகம், எல்லா மொழிகளிலும் ஒட்டுமொத்தமாக 60 கோடி முதல்நாள் வசூலைப் பெற்றிருந்தது.

நேற்று எந்த சிறப்பு விடுமுறையும் இல்லாத நிலையிலும் பாகுபலி -2 பெற்ற வசூல் திரைத்துறையினரை பிரமிப்படையச் செய்துள்ளது. 

மும்பை உள்ளிட்ட பகுதிகளின் வசூல்  - 35 கோடி

நிஜாம் / ஆந்திரா - 45 கோடி

தமிழ்நாடு - 14 கோடி

கர்நாடகா - 10 கோடி

கேரளா- 4 கோடி

மொத்தம்: 108 கோடி

முதல் பாகம் ஒட்டுமொத்தமாக 650 கோடி வசூல் செய்திருந்தது. முதல்நாளிலேயே 100 கோடி என்ற பெரும் சாதனையைத் தொட்டுவிட்டதால், பாகுபலி 2 அந்த இலக்கை விரைவில் தாண்டிவிடும் என்கின்றனர்.      

நீங்க எப்படி பீல் பண்றீங்க