வைரலாகும் அஜித்தின் விவேகம் பட உழைப்பாளர் தின போஸ்டர்!

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவா-அஜித் காம்போவில், ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் உருவாகி வரும் படம் விவேகம். அனிருத் இசையமைக்கிறார். விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. 


இதனால் படத்துக்கு எதிர்ப்பார்ப்புகள் எகிறி உள்ளது. இந்நிலையில், நாளை அஜித்தின் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினம். எனவே, இதை முன்னிட்டு இன்று நள்ளிரவு இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டர் மற்றும் பாடல் டீசர் வெளியிடப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தன.

Ajith Vivegam


இந்நிலையில், அஜித் பர்த்டே ஸ்பெஷல் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, விவேகம் படத்தின் இரண்டாவது போஸ்டர் என்றுக் கூறி ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில், தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்தப்போஸ்டரில், தனது தோள்பட்டையில், மரம் ஒன்றை தூக்கியபடி மரண மாஸ் லுக்கில் இருக்கிறார் அஜித்.


ஆனால், இந்தப் போஸ்டரை, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனால், போஸ்டரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!