Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்திய சினிமாவின் பெருமை' : பாகுபலி -2 படத்தைப் புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உள்ளது பாகுபலி-2; தமிழகத்தில் சற்றே தாமதமாக வெளியானாலும், படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திரைப் பிரபலங்களும் பாகுபலிக்கு, தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

Rajiinikanth

 


இந்நிலையில் நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகுபலி-2 இந்திய சினிமாவின் பெருமை. கடவுளின் சொந்தக் குழந்தையான ராஜமெளலி மற்றும் படக்குழுவினருக்கு எனது சல்யூட்! தலை சிறந்த படைப்பு" எனக் கூறியுள்ளார்.

 


இதையடுத்து அவருக்கு ரானா டகுபதி, தனது நன்றியைத் தெரிவித்தார். அதிலும் குறிப்பாக ராஜமெளலி, தனது ட்விட்டர் பக்கத்தில்," தலைவா.... கடவுளே வாழ்த்தியது போல உணர்கிறேன். இதை விடப் பெரிது வேறு ஏதும் எனக்கு இல்லை" எனக் கூறியுள்ளார்! 

 

 

இந்நிலையில் இயக்குநர் ஷங்கரும், பாகுபலி-2 படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். இது குறித்து ஷங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "தற்போதுதான் பாகுபலி-2 படத்தைப் பார்த்தேன். இது இந்திய சினிமாவின் பெருமை; துணிவான, அழகான, பிரமாண்டமான முயற்சி பிரமிக்க வைக்கிறது. ராஜமெளலி மற்றும் படக்குழுவினருக்கு ஹாட்ஸ் ஆஃப்" எனக்கூறியுள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close